Sunday 30 March 2014
Thursday 27 March 2014
பெண்களின் பாத ஜோதிடம்
பெண்களின் பாத ஜோதிடம்
பெண்களின் பாத ஜோதிடம்
· மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.
· பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.
· பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும,; திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணிவிடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
· பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதாகும். வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும்.
· பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
· மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்து வார்கள்.
· பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.
· பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கும் கொண்டவர்களாக இருப் பார்கள்.
· பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கும், சுய தேவைப் பூர்த்திக் காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள்.
· உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவாகவும் மேல்நோக்கிச் செல்வனவாகவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனையடைவார்கள்.
பெண்களின் கைகள் சொல்லும் ஜோதிடம்
பெண்களின் கைகள் சொல்லும் ஜோதிடம்
கைகள் சொல்லும் ஜோதிடம்
பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
* கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
* கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.
* மணிக்கட்டுகள் தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆபரண யோகமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும்.
* உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மை யைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள்.
* உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
* பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சவுபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சசித்துக் கொள்வார்கள். பாசமானவர்கள். கணவனுக் காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
* கைகளில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தால், அவர்கள் அளவுக்கு மீறிய காம இச்சையுடன் இருப்பார்கள். தம்மையும் மீறி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப வாழ்க்கையில் இவர்களால் நீடித்திருக்க முடியாது. கணவருக்கு உண்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
* பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சவுபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரிங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேச, பழகக்கூடிய வர்கள்.
* நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள். சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.
* கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும், கலகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது.
* கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.
* விரல்கள் அதிகப் பருமனாக இருந்தால் கணவனுக்குக் கண்டம் உண்டாகும்.
* கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷடமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும்.
* விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
* பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள்
ஆண்கள் சரீரம்(உடலமைப்பு)
சாமுத்ரிகா சாத்திரம்
ஆண்கள் சரீரம்(உடலமைப்பு)
சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதிபுடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச்சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில்ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.
3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள்பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரியஅளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப்பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.
6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து,தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.
7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிகஉயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.
8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம்முடியாது.
9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப்புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும்,வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.
10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின்கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.
11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம்.மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரைகை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது.கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்றுவித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன்ஆவான்.
13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டுஉயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போதுசப்தம் வந்தாலும் தரித்திரமாம்.
14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம்உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாகஇருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்குமூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.
15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின்அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின்அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின்காம இச்சை அதிகம் இருக்கும்.
16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால்மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள்இல்லாதிருப்பதே உத்தமம்.
17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால்தரித்திரமாகும்.
18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின்தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால்நன்மைகள் பெருகும்.
19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப்பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள்கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.
உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனிதஉடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்தசாத்திரம்
அடிப்படை
தான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அறிய எண்ணும்மனித வேட்கையின் விளைவுகளாக எழுந்த சந்தைச் சாத்திரங்கள் பல. அவற்றில் சிலவற்றிற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்களும் வானவியல் அறிவின் அடிப்படைகளும் இருந்தன. கைரேகை சாத்திரம்,ஜாதகம், எண் சோதிடம், கௌளி சாத்திரம், மச்ச சாத்திரம், அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அவற்றில் சில.இந்த வகை சாத்திரங்களில் ஒன்று தான் சாமுத்ரிகா சாத்திரம்.
அழிவு
மேற்கத்திய வகை அறிவியல் வளர்ச்சிக்கு, எந்தக் கண்டுபிடிப்பையும் புத்தகபூர்வமாக்கிப் பரவலாக்கும்பாணி அடிப்படை. ஆனால் கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிஞர்கள் தாம் ஆய்ந்துஅறிந்தவற்றைப் பொதுவாக்காமல் தம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு மட்டுமேசொல்லித் தந்து மறையும் வழக்கம் இருந்தது. அதனாலேயே காலப்போக்கில் அடிப்படையும் ஆழமும்தனித் தன்மையும் இழந்து மறைந்துபோன பழமை வாய்ந்த இந்தியக் கலைகளும் அறிவியல்கண்டுபிடிப்புகளும் அதிகம். சாமுத்ரிகா சாத்திரம் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
சாமுத்ரிகா சாத்திரம்
உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனிதஉடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்தசாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம்கடந்து புகழ்பெறும்.
இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும்இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகிஎப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்டஅவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச்சொல்லப்பட்டுள்ளது.
ஆண் பெண் வகைகள்
மூவகை ஆண்கள் (முயல், காளை, குதிரை), மூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப்பெண்கள் (பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்தவகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்றுசொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
சில உதாரண லட்சணங்கள்
ஆண்
ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்தஅதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்;அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்கசிந்தை உடையவர்களாக இருப்பார்கள்.
ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்தஅதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்;அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்கசிந்தை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்
சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள்வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோகவாழ்வு வாழ்வார்கள்.
சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள்வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோகவாழ்வு வாழ்வார்கள்.
மூன்றுவகை ஆடவர்
மூன்று வகை ஆண்கள்
பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண்இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டுதெரிந்துகொள்ளலாம். முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து,மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம்நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன்,வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்துமணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாகஅமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும்,ஆனந்தமும் இருந்திடும்.
ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். அவை:
- முயல் சாதி வகை
- காளைச் சாதி வகை
- குதிரைச் சாதி வகை என்பனவாகும்.
முயல் சாதி வகை:
செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல்சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ளங்கைகள்தாமரை மலர் போன்று காணப்படும். இவர்கள் உண்மை விளம்பிகளாக இருப்பார்களே ஒழிய ஒருபோதும்தீயவற்றை எண்ணவோ, பேசவோ மாட்டார்கள். இவர்களுடைய கழுத்துப் பகுதி பருத்துக் காணப்படும்.
இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுப்பின் நீளம் சுமார் நாலை அங்குலம் இருக்கும்.மேலும், தாமரை மலரை ஒத்திருக்கும் மணத்தை உடைய விந்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள்பெண்ணுடன் புணரும் காலம், வெகு குறுகிய காலமாகவே இருந்திடும். பெரும்பாலும், சிறிதளவே அதுவும்சூடாக உள்ள உணவையே உண்பார்கள்.
காளைச் சாதி வகை:
காளைச் சாதி என்பதற்கு ஏற்றபடி, இவ்வகை ஆண்களின் நெற்றிப் பகுதி அகன்று இருப்பதோடு, உயர்ந்ததலைப் பகுதியையும் உடையவர்களாக இருப்பார்கள். இதழ்கள் பருத்தும், காதுகள் தடித்தும், கழுத்துப்பகுதி பருமனாகவும், ஆமையின் முதுகு போன்று உயர்ந்து, வட்டமாய் உள்ள வயிற்றையும், தூலமானஉடம்பினையும், படர்ந்திருக்கும் பெருத்த தோள்களையும் பெற்றிருப்பர்.
சாந்த குணத்தையும், அமைதியான போக்கினையும் கொண்டு வாழும் காளைச் சாதி ஆண்களின் கண்கள்செவ்வரி படர்ந்து இருப்பதோடு, சிவந்த கைகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் நடந்து வந்தால்மதயானை நடந்து வருவதுபோல் ஒருக்கும். சாந்தமும் பொறுமையும் இவர்கள் இயல்பு. எவ்வாறுகார்மேகம் பாராபட்சமின்றி மழையை உலகெங்கும் பொழிகிறதோ, அதே போன்று உயர்ந்தவர், தாழ்ந்தவர்என மனிதர்களை வித்தியாசப் படுத்தி நடந்து கொள்ளாமல், அனைவரையும் ஒன்றாகவே மதித்து நடப்பர்.பசியைப் பொறுத்திட இயலாத இவ்வகைச் சாதி ஆண்கல், பாம்பொன்று நெட்டுயிர்த்து உறங்குவது போன்றதன்மையை பெற்றிருப்பர்.
கபம் மிகுதியாக உள்ள சிலேத்தும உடம்பினைடும். பருத்த விரல்களையும் உடையவர்களாகியஇத்தகியோரின் விந்தானது சுண்ணாம்பு போன்ற உவர் மணத்தைக் கொண்டிருக்கும். இவர்களின்பிறப்புறுப்பானது கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அங்குலம் இருக்கும்.
குதிரைச் சாதி ஆண்கள்:
குதிரைச் சாதி ஆண்களுக்கு, முகம், உதடுகள், காது, கழுத்துப் பகுதி ஆகியவை செழுமையாக அமையப்பெற்றிருக்கும். முதுகில் புரளுமளவிற்கு நீளமான தலைமுடியைப் பெற்றிருக்கும் இவ்வகை ஆண்களுக்கு,நீண்ட நீண்ட வெண்மையான பற்கள் இருக்கும். இவர்களுடைய விரல்கள், நகங்கள், மற்றும் கால்கள்பார்ப்பதற்கு விகாரமாய் நீண்டு கோணலாகக் காணப்படும்.
குதிரைச் சாதி ஆண்கள், பெரும்பாலும், கபட நெஞ்சம் கொண்டவர்களாகவே இருந்திடுவர். வெகுநேரம்தூங்கும் இயல்பைக் கொண்ட இத்தகையோரின் கண்கள் உருண்டு, வட்ட வடிவுடன் காணப்படும்.மிகுதியான தாதுவை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களின் விந்து முடை நாற்றம் கொண்டதாகஇருக்கும். பிற சாதி ஆண்களை விட அதிகமான நீளத்தை அதாவது சுமார் ஒன்பது அங்குலம் அளவுள்ளபிறப்புறுப்பைக் கொண்டவர்களாக குதிரை சாதி ஆண்கள் இருப்பார்கள்.