Monday, 28 April 2014

திருநீறு

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும். விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும் 1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். 2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

தீட்டு விஷயங்கள் - விளக்கம்

(தீட்டு விஷயங்கள் - விளக்கம்)
-------------------------------------------



ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப் பேரனுக்கு மகன் - எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.

தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.

தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் "வைத்யநாத தீக்ஷிதீயம் ஆசௌச காண்டம்" ஆகும்.

இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப்படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.

தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.

எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.

உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.

உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். நடந்து செல்பவன் காரில் செல்பவன் நடைபாதையில் சென்று கொண்டு, எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.

அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும்.

ஜனனம்

கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ் கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.

அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார், (பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.

குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு

குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவில் ப்ரஸவம் நடந்தால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.

10 நாள் தீட்டு

பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு.

பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்) குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.

இறந்தவர் (குழந்தை)யின் தந்தை, தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்.

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

3 நாள் தீட்டு

கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் 3 நாள் தீட்டு.

தாயின் தந்தை (மாதாமஹர்), தாயின் தாய் (மாதாமஹி), தாயின் ஸஹோதரன் (மாதுலன்), மாமன் மனைவி (மாதுலானி), மாமனார், மாமியார் தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி, பெரியம்மா), தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)

ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்) மருமான். உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் (தௌஹித்ரன்)

ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)

கல்யாணமான பெண், கல்யாணமான ஸஹோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ), ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா), ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)

7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.

2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.

7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.

பெண்களுக்கு மட்டும்

பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு:

உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன், உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை), உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை, இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்)

தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா, தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா, தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்), தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை - பிதாமஹன், தந்தையின் தாய் - பிதாமஹி, தாயின் தந்தை - மாதாமஹன்

தாயின் தாய் - மாதாமஹி, உடன் பிறந்த ஸஹோதரி, ஸஹோதரியின் பெண்கள், மருமாள் (ஸஹோதரனின் பெண்)

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு.

தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா) குமாரன். ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள். ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண். ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண். ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண்.

பக்ஷிணீ

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்).

அத்தையின் பிள்ளை அல்லது பெண், மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள், தன்னுடைய ஸஹோதரியின் பெண், தன் ஸஹோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பௌத்ரீ), பெண் வயிற்றுப் பேத்தி (தௌஹித்ரி), உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தௌஹித்ரன்), உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)

கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்).

ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி. ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3 வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள். ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை. ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா. கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண். ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை. குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.

தீட்டில் தீட்டு

பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக்கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.

பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3 நாள் மட்டும் காத்தால் போதும்.

ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசௌசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசௌசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசௌசம் கிடையாது.

மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.

க்ஷவரம்

சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது:

தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம். முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.

கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று - அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணத்தில் வபனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்துகொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்துகொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை (270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்துகொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.

88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

தீட்டில்லாத காலங்கள்

ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.

மற்ற சில கவனிக்கத் தக்கவை

ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக்காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் தான் தீட்டு.

சனாதன தர்மத்தின்படி 21 விதி

நமது சனாதன தர்மத்தின்படி ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் அந்திம காலம்
வரை அந்த குழந்தையை முன்னிட்டும்,அக்குழந்தை வளர்ந்தபின் அதன் சந்ததியை
முன்னிட்டும் பல சுப நிகழ்வுகள் செய்யப்படுகிறது.அப்படிப்பட்ட சுப
நிகழ்வுகள் குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில்தான் நிகழ்த்தப்பெறவேண்டும்
என நம் தர்ம சாஸ்திரங்கள் வகுத்துள்ளன.

அப்படிப்பட்ட சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம்.

1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.



2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.


3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.


4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.

6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.


8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.


9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.

10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.


11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)

E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)


13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.


14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.


15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே


16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.


17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.



2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.


3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.


4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.


5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)

6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி

B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை

செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,மூலம் மாமனாருக்கு ஆகாது,ரோகினி தாய்மாமனுக்கு ஆகாது என்ற கருத்து நிலவுகிறது.

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,மூலம் மாமனாருக்கு ஆகாது,ரோகினி தாய்மாமனுக்கு ஆகாது என்ற கருத்து நிலவுகிறது.

இது சரி என்றும் தவறு என்றும் இருவேரு கருத்துக்கள் நிலவுகிறது.முதலில் சரி என்பதற்கான காரணத்தையும் பிறகு தவறு என்பதற்கான காரணத்தையும் 
காண்போம்.
ஆயில்யம் ஏன் மாமியாருக்கு ஆகாது?
                                               ஆயில்ய நட்சத்திரம் என்பது புதன் கிரகத்தின் மின் சக்தி அதிகம் உடைய நாள்.இப் புதனின் சக்தி சந்திரனின் சக்திக்கு எதிர் தன்மை உடையது.எனவே தான் புதனின் ஆதிக்கமான ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவ்வாறு திருமணம் செய்த ஆணின் உடலில் இம் மின் சக்தி தாம்பத்யத்தின்போது பரவுகிறது.இந்த புதனின் சக்தி பரவிய உடல் இதற்கு எதிரான சந்திரனின் மின் சக்தி யில் பிறந்த அல்லது சந்திரனின் மின் சக்தி அதிகம் உடையவர்களிடம் எல்லா வகையிலும் மனரீதியாக விலகிச்செல்லும் நிலை ஏற்படுகிறது.இந்த வகையில் சந்திரன் என்பது தாய் ஸ்தானத்தை குறிக்கும்.மேலும் அந்த தாயின் புதல்வன் உடலில் மனைவியின் மூலம் புதனின் மின் சக்திகள் கலந்ததால்,அது தாய் ஸ்தானத்திலுள்ள சந்திரனுக்கு எதிராகிறது."ஆக"
   1.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கும் அவனது தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படலாம்,மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும்.                                          
       2.சந்திர ஆதிக்கம் உடைய மனிதர்கள்,பொருட்கள்,போன்றவற்றால் அந்த மாப்பிள்ளைக்கு உபயோகம் இருக்காது.மாற்றாக இழப்பு ஏற்படலாம்.இதன்காரணமாகவே ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் இதுவே சரி என கூறமுடியாது.காரணம் புதன்,சந்திரன் இந்த இரு கிரகங்களை வைத்து நாம் இதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.அவர்களது ஜனன ஜாதகத்திலுள் மற்ற கிரக நிலைகளை வைத்தே இதை தீர்மானிக்கமுடியும். 
மேலும் அப்படியே கடுமையாக இருந்தாலும் ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தவர்கள் தாயுடன் வசிக்காமல் தனிக்குடித்தனம் இருந்தால் இது தானாகவே பரிகாரம் ஆகிவிடும் என்பது என்கருத்து.இது குறித்த உங்கள் கருத்துக்களை பதியவும்.