Wednesday, 23 July 2014

வாஸ்து – உணர முடிந்த உண்மை

வாஸ்து –  உணர முடிந்த உண்மை

வாஸ்து – உணர முடிந்த உண்மை மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இப்பிரபஞ்சத்தை காக்கும் பஞ்சபூத சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அனுசரித்து வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து வாழாமல் இயற்கையை மீறி வாழும் மனிதகுலமே இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி சுழலுகிறது. இவ்வாறு உழலும் நிலையற்ற வாழ்வை கொண்ட மனிதகுலத்தை வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வளமுடனும் வாழ இந்த வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்சபூத சக்திகளும் சூரிய ஆற்றலின் மின்காந்த அலைகளின் நல்ல சத்தியை தேவையான அளவு வீட்டினுள் வரவழைப்பதும் உருவாகும் தீயசக்திகளை அவ்வப்போது வெளியேற்றவும் தேவையான அமைப்புகளுடன் வீட்டை அமைக்க உதவுவதே வாஸ்துவின் நோக்கமும் தத்துவமும் ஆகும்.

மனிதகுல ஆயுள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைமுறை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சேமிப்பு, வீண் விரைய செலவுகள், ஒழுக்ககேடு, அவமானத்தினால் ஏற்படும் மனச்சோர்வு போன்றவற்றை வாழும் வசிப்பிடங்களே தீர்மானிக்கின்றன.

ஒரு வீட்டில் ஒருவர் வளமையுடன் வசிப்பதற்கு அவ்வீட்டினுள் நிறைந்த நல்ல சக்திகளும், மற்ற ஒரு வீட்டில் ஒருவர் துன்பங்களுடன் உழலுவதற்கு தீயசக்திகளின் ஆதிக்கமே காரணம் என்பதை வாஸ்துவின் மூலம் உணரலாம்..
வாஸ்து என்பது விளையாட்டல்ல, சூரியனும், எண் திசைகளும் இவ்வுலகில் எற்படுத்தும் தாக்கத்தின் உணர்வே என்பது ஆராய்ந்தறிந்த ஒரு அறிவியல் உண்மை.

நம் ஒவ்வொருவர் மனதிலும் இலட்சிய கனவாக உள்ள வளமான ஒரு இல்லம் நனவாக காண இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அபூர்வசக்திகளை நம் இல்லத்தில் சரிவர நிரப்பி எல்லாம் விதிப்பயன் என விரக்தியுடன் வாழும் மனித குலத்தை நம்பிக்கையூட்டி வளமுடன் வாழ வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.,
  • ஆசைகளை நிறைவேற்றுவதல்ல வாஸ்து.
  • இலட்சியங்களை அடையவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருப்பதே வாஸ்து.
  • தகுதியற்ற ஆசைகளையும், ஒழுக்கத்துக்கு புறம்பான சபலங்களையும் விலக்குவதே வாஸ்து.
குடியிருக்கும் வீட்டிற்குரிய வாஸ்து: வந்த பொருள் நிலைக்க வேண்டும் .
வியாபார ஸ்தலத்திற்குரிய வாஸ்து: வந்த பொருள் விரைவாக விற்பனை ஆகி லாபம் ஈட்ட வேண்டும்.
தொழிற்சாலைக்குரிய வாஸ்து: உற்பத்தி திறனை அதிகரிக்க, தொழிலாளர் நல்லுறவைப் பேணி, வெற்றிகரமாக இயக்கி லாபம் ஈட்டவேண்டும். இதை சரியான முறையில் சரியான இடத்தில் வாஸ்துவை செயல்படுத்துவதன் மூலம் உணர்த்த முடியும். வெற்றிபெற முடியும்.

தீராத பிணியை தீர்த்து வைக்கும் ஆற்றல் வாஸ்துக்கு உண்டு, மனைக்கு மேல் மனை வாங்குவதும், மாளிகைக்கு மேல் மாளிகை கட்டுவதும் வாஸ்துவினாலே. கையில் செல்வமிருந்தும் சொந்தமாக ஒரு மனைக்கோ வீட்டிற்கோ மனம் ஏங்குவதும் தற்போதய வசிப்பிட வாஸ்துவினாலே..,

மனையின் அமைப்பில் ஈசானிய மூலை எனும் வடகிழக்கும் கன்னி( நிருதி ) மூலை என்னும் தென்மேற்கும் வீட்டின் பதினாறு வகை செல்வத்தையும், எண் வகை போகத்தையும் நிர்ணயம் செய்கின்றன.

வீட்டினுள்ள பெண்களின் சிறப்பை வடக்கும், தெற்கும், வாயுமூலை எனும் வடமேற்கும் . ஆண்களின் சிறப்பை கிழக்கும், மேற்கும் அக்னி மூலை எனும் தென்கிழக்கும் நிர்ணயம் செய்கின்றன.,

ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு தக்க வயதில் திருமணமும் ஆண்களுக்கு தக்க வயதில் தொழில் (அ) உத்தியோகம் கிடைப்பதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மனையும் அதில் சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட இல்லமுமே காரணம் ஆகும். தாமதமாகும் திருமணம் நடைபெற, தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் வெற்றி பெற, பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடி மகிழ, குழந்தை செல்வம் வேண்டுமென ஏங்குவோருக்கு மழலைச் செல்வம் கிட்டிட, வெற்றி பெற துடிக்கும் இளைய தலைமுறையின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மற்றும் தொழில் சிறக்க வாஸ்துவே வாழ்வளிக்க முடியும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று.

வீட்டின் பிரம்மஸ்தானமான மையப்பகுதியில் பாரம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு..வீட்டினுள் வரும் பஞ்சபூத சக்திகளில் ஒன்றான வான்வெளி சக்தி பிரம்மஸ்தானம் வழியாகப் பெறப்பட்டு வீடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் சுழற்சி சிதறாமல் பரவும்போது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
வாஸ்துவை ஏற்றுக்கொண்டோர்க்கு சில ஆலோசனைகள்:

மனை வாங்கும் போது கவனிக்க தக்க சில ஆலோசனைகள்:
  • வடக்கிலும், கிழக்கிலும் தெரு அமைந்த மனையே மிகச் சிறந்தது. வடக்கு அல்லது கிழக்கு தெரு அமைந்த மனையும் சிறந்தது. மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையே அதனதன் திசையின் தன்மைக்கேற்ப வீட்டை அமைத்துக் கொள்வதே சிறப்பு.
  • நாம் குடியிருக்கும் மனைக்கு வடக்கு, கிழக்கு, வட கிழக்கு திசையில் அருகிலோ அல்லது தொலைவிலோ மட்டுமே மனை வாங்குவது சிறப்பு.
  • மனையில் கிழக்கு ஆக்கினேய வளர்ச்சியோ, மேற்கு வாயுவிய வளர்ச்சியோ இருக்ககூடாது.
  • மனைக்கு வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் மலை, குன்று, உயரமான பாரமான கட்டிடங்கள் இருக்ககூடாது.
  • மனைக்கு மேற்கு, தெற்கு, தென்மேற்கில் நீர் நிலை, ஓடைகள், வாய்க்கால், குட்டை, பள்ளம் இருப்பது சிறப்பல்ல.
  • மனைக்குள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சரி செய்ய இயலாத மேடாக இருந்தால் நல்லதல்ல.
  • மனையின் அமைப்பில் திசைகள், மூலைகள் குறைந்து அல்லது வளர்ந்து இருப்பதினால் ஏற்படும் நன்மை தீமைகளை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும். எனவே மனை அமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும்.
கட்டிடம் கட்டுவது அவரவர் பொருளாதார வசதிகேற்ப அமைவது.
அப்படி கட்டப்படுகின்ற வீட்டை அமைக்க சில யோசனைகள்:
  • சுற்றுப்புற சூழல் வாஸ்துவின் தீயதாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் கவசம் காம்பெளண்டு சுவராகும். அதில் அமைக்கும் வாசல் கேட் நற்பலன்களின் வரவேற்பு ஆகும்.
  • ஆழ்துளை கிணறு மனையின் வடக்கு, கிழக்கு உச்சத்திலோ, வடகிழக்கிலோ மட்டுமே அமைய வேண்டும்
  • கட்டிட வேலை குறிப்பிட்ட காலத்தில் முடிய கட்டிடத்திற்கு வானம் (கடைக்கால்) தோண்டும் போது, ஈசானிய மூலையில் துவங்க வேண்டும். கட்டிட அஸ்திவார வேலை கன்னி மூலையில் துவங்க வேண்டும்.
  • கட்டிடத்தின் தலைவாசல் திசையின் உச்சமான பகுதியில் அமைய வேண்டும். உள் அறைகளின் வாசலும் உச்சமாக இருப்பது சிறப்பு. ஆனால் ஒரே வீட்டில் தெற்கு ஆக்கினேயத்திலும், மேற்கு வாயுவியத்திலும் ஆக இரண்டு வாசல் வைக்ககூடாது. தெற்கிலும், மேற்கிலும் உச்சத்தில் ஆக இரண்டு வாசல் வைக்கக்கூடாது. ஆக ஒரு வாசல் மட்டும் தான் வைக்க வேண்டும்.
  • கிழக்கு மற்றும் வடக்கு தலைவாசல் அமைந்தால் மேற்கு, தெற்கில் பின்புற வாசல் அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மேற்கு மற்றும் தெற்கு தலைவாசல் அமைந்தால் அதன் எதிர் திசையில் கண்டிப்பாக வாசல் அமைக்க வேண்டும்.
  • செப்டிக் டேங்க் மனையின் கிழக்கு அல்லது வடக்கு திசையின் நடுவில் அமைய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிடத்தின் தென்மேற்கு மூலையில் அமைவது நன்று.
  • மாடிபடி வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே அமைக்கும் போது வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைப்பதோடு அதன் நிலை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பூமியிலிருந்து ஏறும் போது அமைத்துக் கொண்டு இடத்திற்கு தகுந்தவாறு மேலும் சில நுட்பங்களுடன் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • கன்னி மூலையில்(தென்மேற்கு) தான் தலைவரது படுக்கை அமைய வேண்டும் என்பது ஒரு மரபு. அதில் குடும்ப தலைவர் தெற்கே தலை வைத்து படுப்பது குடும்பத்திற்கே ஒரு கவசம்.
  • பூஜை அறையில் ஈசானியத்தை நோக்கி பூஜை செய்ய வேண்டுமென்பது சாஸ்திரமேயன்றி ஈசானிய மூலையில் தான் பூஜை அறை அமைய வேண்டுமென்று கட்டாயமில்லை. வீட்டின் அமைப்பிற்கேற்ப அருள்மழை பொழியும் இடத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கினேய மூலையில் சமையல் அறை அமைக்க முடியாத சூழ்நிலையில் ஈசானியம் தவிர மற்ற அறைகளில் அவ்வறையின் ஆக்கினேய மூலையில் சமையல் மேடை கிழக்கில் வடக்கு சுவரை தொடாமல் அமைத்துக் கொள்ளலாம்.
  • மனையின் கட்டிடத்தை சுற்றி மேற்கைவிட கிழக்கிலும், தெற்கைவிட வடக்கிலும் அதிக காலியிடம் விடப்படுவது ஆண், பெண் வெற்றிக்கு அடிப்படை.
  • வீட்டின் முன் போர்டிகோ அமைக்கும் போது பில்லர் இல்லாமல் பீம் முறை கொண்டு அமைப்பது சிறப்பு.
  • வீட்டின் ஆர்ச் வாசல் அமைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், பொது உபயோக கட்டிடங்களில் ஆர்ச் அமைக்கலாம்.
  • வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே கழிப்பறை அமைக்கும் போது வடமேற்கு அல்லது தென்கிழக்கில் அமைப்பது ஆரோக்கியத்திற்கு அழைப்பு.
  • கழிப்பறையில் மனிதன் அமரும் திசை வடக்கு அல்லது தெற்கு நோக்கி மட்டும் அமைப்பது உடல் நலத்திற்கு பாதுகாப்பு.
  • போர்வெல் கிணறு வடகிழக்கில் மட்டும் அமைவது பொருள்வரத்தின் அறிகுறி மேல்நிலை நிர்தேக்கத் தொட்டி தென்மேற்கில் உயரத்தில் அமைப்பது வருவாயில் பெரும்பகுதி சேமிப்பு.
வாடகை வீடு, அபார்ட்மென்ட், அரசு குடியிருப்பு ஆகியவற்றில் வசிப்பவர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கும் வியாபாரஸ்தலத்தில் வாஸ்து குறைபாடுகளை பெங்சூயி எனும் சீனவாஸ்து சாஸ்திர முறைப்படி எளிய வழியின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் மார்க்கமுண்டு.

மேலும் வாஸ்து எனும் நலம் நாடும் சூத்திரத்துடன் வளம் நிறைந்த ஒரு வீட்டை அமைக்க வாஸ்து வல்லுநரின் ஆலோசனையின் பேரில் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்வது நற்பலனை அளிக்கும்.

ஈசானிய மூலை

வாஸ்து என்னும் விஞ்ஞானம்

  ஆதிகாலத்தில் நம்முனிவர்கள் கண்டறிந்த வாஸ்து சாஸ்திரமும் நம்காலத்தில் விஞ்ஞான அடிப்படையிலான சக்தி அலைகளின்  அடிப்படையில் செயல்படும் வாஸ்து சாஸ்திரமும் வெவ்வேறல்ல.இரண்டும் ஒன்றேதான்.அவற்றின் அணுகு முறைகள் தான் மாறுபடுகின்றன.ஆனால் செயல்பாடு ஒன்றே,காலத்தின்போக்கால் வாழ்க்கை முறையில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படினும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம் எக்காலத்திலும் ஒன்றேதான்.

                                      
  மனிதன் வாழும் இல்லத்தின் அமைப்பு,அளவு மாறிக்கொண்டே இருக்கலாம்.ஆனால் மனிதன் வாழ்க்கைத்தத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் பிறக்கிறான்,வளர்கிறான்,குடும்ப வாழ்க்கை இன்பம் காண்கிறான்.குழந்தைகள் பிறக்கின்றன,அவர்கள் வளர்கிறார்கள்,இப்படியாக இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எந்த       மாற்றமும் இல்லை. ஆதிகாலந்தொட்டு, நாகரிக வளர்ச்சி அடைந்துள்ள இந்தக்காலம் வரை இந்த வாழ்க்கையைப் பயணம் தொடர்ந்துகொண்டேயுள்ளது.
  அமைப்பு என்றால் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி உருவாகும் அமைப்பாகும்.வாஸ்து சாஸ்திரப்படி ஈசானியம் திறந்தும் நைரிதிமூடியும் இருக்கவேண்டும்.இந்த அமைப்பால் ஏராளமான அளவு காஸ்மிக் சக்தி கட்டிடத்திற்குள் நுழைந்து.அதிக அளவு உயிர்ச் சக்தியாக மாறி அவற்றை மனிதனின் செயல்களுக்கு ஏற்ப கிரகிக்கும் வண்ணம் அமைகிறது.ஈசானியம் திறந்திருக்கும் அமைப்பால் எடை குறைவு ஏற்பட்டு,நைரிதி மூடி இருப்பதால் எடை மிகுதி ஏற்பட்டு சமஎடையின் பலனைத் துய்க்குமபடிச் செய்கிறது.

    பூமியின் அமைப்பால் உண்டாகும் இயற்கை நியதி,எனவே இயற்கையோடு இயைந்து இயற்கையின் பயனை எளிதில் துய்க்கும் வண்ணம் கட்டிடத்தை வடிவமைப்பதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.வாஸ்து என்பது பஞ்ச பூதங்களின் ஆளுகைக்குட்பட்ட இயற்கைக் கோள்களின் நிலை தாக்கல் ஒவ்வொன்றுக்கும் இடையிலான சக்தி அலைகளின்வேகம்,அடர்த்தி ஆகியவற்றுடன் மனிதன் வாழும் நெறி முறைகளை உணர்த்தும் ஆக்க பூர்வமான விஞ்ஞானமாகும்.

   சூரியக்குடும்பத்தினின்று பெரும் சக்தி அலைகளைக் கிரகித்து மனிதன் உயிர் வாழ்கிறான்.சூரியனின் காஸ்மிக் அலைகளை நேரிடையாக மனிதனால் கிரகிக்க இயலாது.இதற்குப் பாலமாக அமைவது பூமியாகும்.அதாவது பூமியும்,அதன் மேலுள்ள கட்டிடங்களும் அவற்றின் நிலை தன்மைக்கு ஏற்ப சக்தி அலைகளைப்பெற்று உயிர் சக்தியாக மாற்றிக்கொடுத்து மனிதனை வாழவைக்கிறது.ஒவ்வொரு மனையும் மிகச்சிறிய பூமியாகச் செயல்படுகிறது.மனை மற்றும் கட்டிடங்கள் ஜடப்பொருள்களால் ஆனது.ஆனால் கட்டிடத்திற்குள் சக்தி அலைகளின் ஆதிக்கம் இருந்துகொண்டேயுள்ளது.கட்டிடத்தின் அமைப்புக்கு ஏற்ப இந்த அலைகளின் தன்மை அடர்த்தி மாறுபடுகிறது.

எப்போதும் நகர்ந்து கொண்டேயுள்ள இந்த சக்தி அலைகளை, மனிதனின் தேவைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் மாற்றி அமைக்கும் வண்ணம் கட்டிடம் இருக்கவேண்டும்.இதுதான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.அதாவது கட்டிடத்தின் வடிவமைப்பு அதிக சக்தியை உள்ளே பெற்று உயிர்ச் சக்தியாக மாற்றி,மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப விகிதத்தில் பெறச் செய்யவேண்டும்.
  • அதிகமான சக்தியை உள்ளே பெறவேண்டும்.
  • பெறப்படும் சக்தி முழுமையாக உயிர் சக்தியாக மாற்றப்படவேண்டும்.
  • மாற்றப்படும் உயிர்ச்சக்தி மனிதன் வெவ்வேறு செயல்களுக்கு ஏற்ற        அளவில்   அந்தந்த இடத்தில் கிடைக்கச்செய்யவேண்டும்.  

இந்த அடிப்படையில் கட்டப்படும் கட்டிடங்கள் நல்ல வாஸ்து பலம் பெற்று,அதில் இருப்போர் எல்லா வகையான நன்மைகளும் பெற்று மன மகிழ்ச்சி, குடும்பவளர்ச்சி பெற்று வாழ்வார்கள்.

ஈசானிய மூலை

   ஈசானிய மூலை வழியாக சூரிய சக்தி மனைகளில் நுழைகிறது. ஈசானிய மூலை வளர்ந்து இருக்க தண்ணீர்தொட்டியை இங்கு அமைக்கவேண்டும்.இந்த அமைப்பால் சூரிய சக்தியின் இழுப்புப் பரப்பு அதிகரித்து சக்தியின் அளவை வெகுவாகக் கூடுதலாக்கிறது.இந்த அதிகப் படியான சக்தியால் வீட்டில் உள்ளோர் உடல்நலம்,மனவளம் பெற்று வாழ்வர்.

ஈசானியம் மூடல்

       ஈசானிய மூலையில் அறை அமைத்து,அந்த அறையின் வடக்கு,கிழக்கு பாகத்தில் கதவு வைக்காவிட்டால்,அந்த அமைப்பு ஈசானியம் மூடுதலைப் போன்றதாகும்.மனையின் ஈசானிய மூலையில் கிழக்கு,வடக்கு சுவர்களை ஒட்டி அறை அமைத்தால் அதுவும் ஈசானிய மூடுதலைப் போன்றதுதான்.மூடப்பட்ட ஈசானியத்தில் சக்தியின் நுழைவு பெரிதும் பாதிக்கப்பட்டுக் குறைகிறது,இதனால் மாற்றப்படும் உயிர் சக்தியின் அளவும் அதற்கு ஏற்ப குறைகிறது.மனிதனின் தேவை அளவுக்குக் குறைந்தால்,உடல்நலம் குறைகிறது.மேலும் இந்த சக்தியின் அளவு மிகவும் குறைவாக இருந்தால்,வீட்டிற்குள் பரவும் சக்தியின் அடர்த்தி பெரிதும் குறைந்து,வாஸ்து பலம் குறைந்து,அங்கு எல்லாத்துன்பங்களும் உண்டாகின்றன.அதாவது ஈசானியத்தை மூடுதல்,குரல் வளையை அடைத்துக்கொண்டு உண்பதைபோன்றதாகும்.

ஈசானியப் படுக்கை அறை

                                     

ஈசானியத்தில் படுக்கைஅறை அமைக்கக்கூடாது,வீட்டில் உருமாற்றம் அடையும் உயிர் சக்தி ஈசானிய மூலையை அடையும்போது மிகவும் அடர்த்தி குறைந்த நிலையில் இருக்கிறது.இதைப் படுக்கைஅறையாகப் பயன்படுத்தும்போது,நல்ல வலிமையான அணுக்களை உற்பத்தி செய்யப்போதுமான சக்தி அடர்த்தி இல்லாததால்,அதனால் உருவாகும் குழந்தைகள் முழுவளர்ச்சி அடையாத நிலையில் பிறக்கிறார்கள். மனவளர்ச்சி குறைவோ அல்லது உடல் வளர்ச்சி குறைவோ உள்ள குழந்தைகள் தான் பிறப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் ஈசானிய மூலையில்  படுக்கை அறை அமைக்கக்கூடாது.

ஈசானியத்தில் சமையலறை

                                         

   ஈசானியத்தில் சமையலறை அமைக்கக்கூடாது.வீட்டில் பெண்கள் பெரும்பாலான நேரம் சமயலறையில் இருக்கிறார்கள்.குறைந்த அளவில் உள்ள உயிர்சக்தியால் பெண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப் படுகிறது.வீட்டில ஆக்கினேயத்தில் மிக அதிக அளவில் உள்ள வெப்பசக்தியானது.ஈசானிய மூலையில் வெளிப்பக்க அளவில் தான்  உள்ளது.எனவே சமையல் செய்யும்போது அதிகமான அளவு எரிபொருள் செலவாகிறது.மேலும் இந்த வெப்ப அளவின் தன்மையால் வீட்டிற்குள் இழுக்கப்படும் சக்தி அலைகள் பாதிக்கப்பட்டு உயிர்சக்தியின் அளவு பெரிதளவு குறைகிறது.இதனால் வீட்டின் வாஸ்து பலம் குறைகிறது.

ஈசானிய மூலையில் உயரமான கட்டிடங்கள்                          
         
ஈசானிய மூலையில் உயரமான கட்டிடங்கள் கட்டக்கூடாது.ஈசானிய மூலையில் உயரமான கட்டிடம் இருந்தால், அது ஈசானியம் மூடுதலைப் போன்றதாகும்.எனவே உயிர்சக்தியின் உற்பத்தி மிகவும் குறைந்தால்,வாஸ்து பலம் குறைந்து தீயபலனைக் கொடுக்கும்
தெரிந்து கொள்வோம் வாங்க //// வருவாய் துறை -ஆவணங்கள் -பட்டா
வருவாய் துறை -ஆவணங்கள் -பட்டா-1

வருவாய் துறை -ஆவணங்கள் -1
பட்டா -1
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது”

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?

மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்கள் 

நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். 
ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.


பட்டா 

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.



'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.



'அ ' பதிவேடு 

 



நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.


FMB (புல எல்லை வரைபடம் )

FIELD MEASUREMENT BOOK -(FMB)
 

இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.

இதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.

பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -2



பட்டா -2
பட்டா என்பது என்ன ?
பட்டா ஏன் முக்கிய ஆவணமாக கருதபடுகிறது ?

மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன



இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது.


இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது.


ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.


கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும்.


சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.


பட்டால் தான் தெரியும் பட்டா வின் மகிமை

மதுரை, மே.16-

போலி பட்டா தயாரித்து ரூ.28 லட்சம் மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மேலக்கோபுர வாசலைச் சேர்ந்தவர் பொன்னழகு, பெத்தானியாபுரம் ரவி, மேலக்காலை சேர்ந்த கிருபாகரன். இவர் திருமங்கலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.


இவர்கள் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடமும், மகளிர் சுயஉதவிக்குழுவினரிடமும் அரசிடமிருந்து இலவச வீட்டுமனை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 140 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் வசூல் செய்தனர். பின்னர் போலியாக பட்டா தயாரித்து கலெக்டர் போல் கையெழுத்திட்டு ரப்பர் ஸ்டாம்பு வைத்து அவற்றை பணம் வசூலித்த பொதுமக்களிடம் கொடுத்தனர்.


இதோடு மட்டுமல்லாமல் பட்டா வாங்கிய அனைவரையும் நம்ப வைப்பதற்காக, ஆனையூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பூமிபூஜையும் நடத்தினர். இதனால் பட்டா பெற்றவர்கள் நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


பட்டா வாங்கியவர்கள் சில நாட்கள் கழித்து தங்கள் இடங்களில் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் உண்மையானவையா? என்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர்.


அப்போதுதான் அவை போலி பட்டா என்பதும், பணத்தை வசூலித்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆனையூரைச் சேர்ந்த சேது மனைவி ராணி என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.


இதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்க வேலு, இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ரவிக்குமார் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து பொன்னழகு, ரவி, வருவாய் ஆய்வாளர் கிருபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.


இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -3

வருவாய் துறை -ஆவணங்கள்,

 பட்டா -3
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

பட்டா மாறுதல் செய்வது எப்படி-பட்டா -4


பட்டா பெறுவது எப்படி 

பட்டா -4

பட்டா என்ற ஆவணத்தை பற்றி ஓரளவுக்கு முந்தய பதிவுகளில் தெரிந்துகொண்டோம் ,இனி பட்டா மாற்றம் செய்வது பற்றி அறிந்துகொள்வோம் ,,

'பட்டா' மாறுதலுக்கான விண்ணப்பம் அளித்தல் நடைமுறைகள் (Applying for Patta Name Transfer ie. Changing the Name of the Owner of an immovable property like farmlands.)

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரமே 'பட்டா' எனப்படும்.



அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்த வேண்டும். இப்படி ஆவணப்படுத்துகையில், ஒரு சொத்தை விற்பவரே இந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்தலாம். அல்லது இதற்காக விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்து, அரசிடம் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை நாடலாம். இப்படி அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு, உறுதியான, தூய்மையான வெள்ளைத் தாளில் விற்பவரின் பெயர், முழு முகவரி, சொத்தின் உரிமைக்கான வழிகள் உள்ளிட்ட தகவல்களுடன், சொத்தை வாங்குபவரின் பெயர், முழு முகவரி போன்ற விவரங்களுடன், அவற்றிற்கான சட்டப்பூர்வமான சான்றுகளுடன் ஆவணத்தைத் தயார் செய்து, அந்த ஆவணத்தை, அச்சொத்து உள்ள பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அங்கு, அப்பதிவிற்குப் பதிவுக் கட்டணமும், அச் சொத்தின் விற்பனை நடவடிக்கைக்கான வரிகளும் ரூபாய் மதிப்பில் பணமாக/ கேட்பு வரைவோலையாக கட்டப்படவேண்டும். இதில் பதிவுக்கட்டணத்தைத் தவிர்த்து, மற்ற வரிகளைப் பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ கட்டுவதற்குப் பதில் ஆவணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் உறுதியான தூய்மையான வெள்ளைத் தாள்களுக்குப் பதில் அந்த வரிக்கு இணையான மதிப்புள்ள முத்திரைத் தாள்களைக் கூட வாங்கிக் கொள்ளலாம்.


இந்த ஆவணப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தலை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்:

வழக்கமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குகிறோம். அப்பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அதைச் சொன்னால் போதும்- கடைக்காரர் அதை எடுத்துக் கொடுத்துவிடுவார்- இது ஒரு விதமான வணிக நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் வாங்குபவர் கேட்கும் ஒரு பொருளின் பெயரைச் சொன்னாலே அதைக் கடைக்காரர் எடுத்துக் கொடுத்துவிடுவார். இங்கு ஒரு பெரிய அளவிலான ஒரு தொகை செலவழித்துச் செய்யப்படும் வணிக நடவடிக்கை ஒன்றை எடுத்துக்கொண்டால், அதாவது ஒரு இலகுரக இயக்கூர்தி- மகிழ்வுந்து ஒன்றைச் சுமார் நாற்பது இலட்ச ரூபாய்க்கு ஒருவர் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த வணிக நடவடிக்கையில் வாங்குபவர் பணத்தைக் கொடுக்கிறார்; விற்பவர் அதற்கான 'இரசீதுடன்' பொருளைக் கொடுக்கிறார். வாங்குவது என்பது இத்துடன் முடிந்துவிட்டது. வாங்கும் பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அந்தப் பெயர் ஏற்கனவே வரையறுக்கப்பட்டிருக்கும்; அப்பொருளுக்கு ஒரு அடையாளமும் இருக்கும். அந்தப் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அப்பொருளுக்கு ஒரு நிலையான விலையும் இருக்கும். எனவே, விற்பனையாளர் தரும் 'இரசீது' அப்பொருளின் பெயர் மற்றும் அடையாளத்தைத் தாங்கி இருக்கும். அந்த விற்பனையாளர் ஒரு வழக்கமான விற்பனையாளர் என்பதால் அவரின் விற்பனையகத்தில் 'இரசீதுப் புத்தகம்' மற்றும் சட்டப்படியான அனைத்து ஆவணங்களும் இருக்கும்.

அதே நேரம் ஒரு அசையாச் சொத்தை ஒருவர் வாங்கும் போது அச் சொத்திற்கு அனைவருக்கும் தெரியுமளவிற்கு ஒரு வரையறுக்கப்பட்ட பெயர் இருக்காது. வீடு என்றோ, விளை நிலம் என்றோ ஒரு பொதுவான பெயரைக் குறிக்க முடியுமா? அல்லது சொத்தை விற்பவர்கள் வழக்கமான விற்பனையாளர்கள் இல்லை என்பதால் அவர்களிடம் 'இரசீதுப் புத்தகமும்' இருக்காது. எனவே, ஒரு பத்து 'ஏக்கர்' நன்செய் நிலத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் பத்து ஏக்கர் நன்செய் நிலத்தை நான் வாங்கியாயிற்று; அதற்காக நான் செலுத்திய தொகைக்கு ஒரு 'இரசீது' போட்டுத் தாருங்கள் என்று என்றும் கேட்க முடியாது. அது இவ்வளவு எளிதான வேலையன்று. அதனால், இது போன்ற சொத்துக்களை விற்றல், மற்றும் வாங்குதலில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும். அதாவது மகிழ்வுந்து வாங்கும் பொழுது விற்பனையாளர் தரும் 'இரசீது'வைப் போல, இங்கு ஒரு 'இரசீது' கொடுக்க வேண்டும். அந்த 'இரசீது' தான் ஆவணம் ஆகும். இந்த 'இரசீதில்', விற்பவர் மற்றும் வாங்குபவர் குறித்த தகவல்கள்- அதாவது பெயர், முழு முகவரி போன்றன- விற்கப்படும் சொத்தைப் பற்றிய முழு விவரங்கள்- அதாவது சொத்தின் பரப்பளவு, சொத்து இருக்கும் இடம், அச்சொத்தின் உரிமை விற்பவருக்கு எப்படி வந்தது, சொத்தின் தற்காலத்திய விலை மதிப்பு, இவர்கள் விற்கும் விலை உள்ளிட்ட விவரங்கள்- முழுமையாக இருக்க வேண்டும். இவ்விவரங்கள் அனைத்தும் அடங்கிய ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த ஆவணத்தைத் தயாரிக்கத் தெரிந்த விற்பனையாளர் தனக்காகத் தானே ஒரு ஆவணத்தைத் தயாரிக்கலாம். அல்லது அரசிடம் இசைவு பெற்ற ஆவன எழுத்தர் ஒருவரிடம் சென்று ஆவணப்படுத்தலாம். அப்படி ஆவணப்படுத்திய பின், அதை அப்பொழுதே முறையாக அப்பகுதிச் சார் பதிவாலரிடத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பதிவுக்கட்டனமும், முத்திரைத் தாள் கட்டணமும் விதிக்கப்படும். அப்படி விதிக்கப்படும் பதிவுக்கட்டனத்தைப் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். முத்திரைத் தாள் கட்டணத்தையும் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். இந்த முத்திரைத் தாள் கட்டணத்தை பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அக்கட்டனத்தின் அளவு முக மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி, விற்பனை ஆவணத்தையே அம்முத்திரைத் தாள்களிலேயே தயாரித்து விடுதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, முத்திரைத் தாள் கட்டணத்தை முத்திரைத் தாள் வடிவிலும் அல்லது வேறு சில ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவிலும் செலுத்தலாம்.

இந்த ஆவணத்தைப் எழுதிப் பதிவு செய்யும் பொழுது, பதிவாளர் அலுவலகத்தில் 'முத்திரைத் தாள்' வரி என்று சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைக் கட்ட வேண்டும். அந்த வரியை நேரிடையாகக் கட்டுவதற்குப் பதிலாகத் தான், அந்த வரியின் மதிப்பின் அளவிற்குச் சமமான மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி அத் தாள்களில் ஆவணத்தைத் தயார் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.


விவசாய நிலங்கள், வீடுகள், காலி இடங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்தினை வாங்கும் பொழுது, அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர்.

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து ஒரு அல்லது பல அசையாச் சொத்துக்களை விற்கும் பொழுது, விற்பவ(ர்களும்) ரும், வாங்குபவ(ர்களும்)ரும் சேர்ந்து அதற்காக ஒரு ஆவணம் தயாரித்து அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்த ஆவணத்துடன் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதற்கெனத் தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. அவ்விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து அல்லது அதே போல கையில் எழுதி ஒரு விண்ணப்பம் தயார் செய்து விண்ணப்பத்துடன் அச்சொத்தின் தற்போதைய உரிமை மாற்றத்திற்கு முந்தைய உரிமை மாற்றத்தின் நாளுக்கு முன்தினம் முதல் இந்த விண்ணப்பம் அளிக்கும் நாள் வரையிலான காலத்திற்கு சொத்து எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்தப் படவில்லை என 'வில்லங்கச் சான்றிதழ்' ஒன்றையும் சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும்.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -5

வருவாய் துறை -ஆவணங்கள், 
பட்டா -5


சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்


விளக்கங்கள் விவரம்:

பட்டா:

 ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: 
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: 
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்:
 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்:
 கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்: 
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: 
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து
பிரிவு.


இலாகா: 
துறை.


கிரயம்: 
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: 
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்:
 நில அளவை எண்.



இறங்குரிமை:
 வாரிசுரிமை.


தாய்பத்திரம்: 
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.



ஏற்றது ஆற்றுதல்: 
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.



அனுபவ பாத்தியதை: 
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு:
 நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்: 
அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்:
 பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: 
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -6


வருவாய் துறை -ஆவணங்கள்

பட்டா -6

நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் . உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .

உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள் :-

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் . சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் . பட்டா உங்களிடம் இல்லையா ...? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் .

பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் . மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .

சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .


 

வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் . அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .


வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் . உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .


வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .


ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .


கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது .




உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் . சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் .  

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -7


வருவாய் துறை -ஆவணங்கள், 

பட்டா -7

போதுமானவரை உங்களை எச்சரிக்கை செய்துவிட்டோம் என்றாலும் கூடுதலாக இன்னும் ஒரு பதிவு 

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

தவறான வாஸ்து அமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள

தவறானவாஸ்துஅமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள:-

  1. மனையின் வடக்கு மற்றும் கிழக்கு பாகங்கள் உயர்வாக இருந்து மற்ற பக்கங்கள் இருப்பின் பொருளாதார தாழ்வு, வம்ச வளர்ச்சி பாதிப்பு போன்ற தீய விளைவுகளே ஏற்படும்.

  2. மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆயுள் குறையும்.வம்சவளர்ச்சி தடைபட்டு தீயவிளைவுகளே ஏற்படும்.

  3. மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ,வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண் வாரிசு இல்லாமல் போகும்.மீறி ஆண்வாரிசு இருந்தாலோ ஆயுள் குறைவாகவோ அல்லது முரட்டு குணம் கொண்ட தீய நடததையுள்ளவர்க்ளாகவோ இருக்கலாம்.

  4. வடகிழக்கில் கட்டிடங்களை அமைத்து தென்மேற்கில் கிணறு போன்ற பள்ளமான அமிப்புகளிருந்தால் அந்த வீட்டில் துர்மரணம் ஏற்படும்.

  5. வீட்டு மனையில் வடகிழக்கு மூலை நீண்டு அமைந்திருந்து, வீட்டு கட்டிட அமைப்பில் வடகிழக்கு பாதிப்படைந்தால் பெரியவர்கள் உயிரோடு இருக்க இளவயதினர் உயிர் பறிப்படையும்.

  6. வடகிழக்கு இடத்தில குப்பைக் குழி அமைப்பதோ, கழிவறை அமைப்பதோ மிகவும் தீய பலன்களைத தரும் பொருளாதார தாழ்வு, அவப்பெயர்,தீராத நோய்கள் போன்ற பாதிப்பைத தரும். இங்கு சமையல் அறை இருப்பினும் இதே தீய பலன்கள் ஏற்படும்

  7. மனையின் கிழக்கு பாகம் மேடாக இருந்தாலும்,கிழக்கு சுற்றுச் சுவற்றோடு சேர்ந்து கட்டிடம் அமைந்து இருந்தாலோ பொருளாதார வீழ்ச்சியும்,வம்சவளர்ச்சியும் பாதிக்கும். வாரிசுகள் அறிவுவளர்ச்சியில் குறைவாக இருக்கும்படியான தீய பலன்களே ஏற்படும்.

  8. கிழக்குபாகத்தில் இடம் இல்லாமல் சுற்று சுவற்றோடு சேர்ந்து மேற்கில் சரிவாக அமைக்கும் வீட்டில் உள்ளோர் தீராத வியாதிகள் அல்லது நரம்பு சம்பந்தமான மற்றும் கண் சம்பந்தமான நோய்களால் பாதிப்பு அடைவார்கள்.

  9. தென்கிழக்கில் கிழக்கிலிருந்து பாதைத்தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் முரட்டு சுபாவத்துடன் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டையிடுபவளாகவும் இருப்பாள். ஆண் தவறான பழக்கங்களில் சிக்கித் தவிப்பார்கள்.

  10. தென்மேற்கில் தெற்கிலிருந்து பாதைத் தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் உடல்நல பாதிப்புடனும் தவறான பழக்கங்களுக்கும், இரத்த அழுத்தம், படப்படப்பு மற்றும் திடீர் மரணங்களும் ஏற்படலாம்.

  11. மனையின் வடக்கில் இடமில்லாமலும் தெற்கில் அதிக காலியிடங்களுடனும் தென்மேற்கில், தெற்கில் கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அந்த வீட்டின் பெண்கள் தீராத நோய்களால் பாதிப்படைவார்கள். மனநலமும் பாதிப்பு அடையும. பொருளாதார வீழ்ச்சியும், திடீர் மரணங்களும் ஏற்படும்.

  12. தென்கிழக்கு மூலை தெற்கில் அல்லது கிழக்கில் வளர்ச்சி பெற்று அதே மூலையில் கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள் இருந்தாலும், வடக்கு சுற்றுச் சுவற்றில் வீட்டை அமைத்து தெற்கில் அதிக காலியிடங்கள் இருந்தாலும், வடகிழக்கு மூடும் படியாக கட்டிடம் அமைந்திருந்தாலும் அந்த வீட்டில் பொருளாதார வீழ்ச்சி, கடன் தொல்லை, திருட்டு, தீவிபத்துக்கள் வழக்கு விவகாரங்கள் போன்ற தீய அமைப்பே தொடரும். ஆண் வாரிசுகள் குறைவு பட்டு பெண்களுக்கான சொத்தாக மாறும் அபாயம் உண்டு.

  13. தெற்கில் அதிக காலியிடமிருந்து கிழக்கு, வடக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடம் அமைத்து வடகிழக்கு பாதிப்படைந்து, தெற்கில் கிணறு போன்ற குழி அமைப்பிருந்து, தெற்கில் கூரை தாழ்வாக அமைந்திருந்தால் அந்த வீட்டின் பெண் துணை இழந்து தவிப்பாள். தீராத வியாதியாலும், தவறான பிள்ளைகளாலும் வேதனைப் படுவாள்.

  14. வடகிழக்கு எல்லையில் கட்டிடம் அமைத்து, கிழக்கு வாசல் வைத்து மேற்கிலும் தெற்கிலும் அதிக காலியிடமிருக்கும் அக்னிமூலை மனையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு பிரிவார்கள், குழந்தைகள் நோயாலும், தவறான வாழ்வாலும் அலைக்களிக்கபடுவார்கள்.

  15. மனையின் காளியிடதிலோ, வீட்டின் அறைகளிலோ தெற்கு பாகம் பள்ளமாக இருந்தால் பெண்களுக்கு தீராத நோய்களால் வேதனை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் .

  16. தெற்கில் அதிக காலியிடமிருந்தால் பொருளாதார நஷ்டம், வீண் விவகாரங்கள், பெண்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும்.

  17. தென்மேற்கு மூலையில் மேற்கில் பாதைதாக்கம் இருந்தால் அங்கு கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அது ஆண்களை தீய வழியில் நடத்தி தற்கொலைக்கு தூண்டும், தீராத நோய்கள் போன்ற தீய பலன்களை ஆண்களுக்கு ஏற்படுத்தும் தவறான அமைப்பாகும்

  18. மனையில் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தை விற்பனை செய்தால் பொருளாதார வீழ்ச்சியும், உடல்நல பாதிப்பு, தொழில் முடக்கம் ஏற்படும்.

  19. தெற்கு திசையிலும், மேற்க்கு திசையிலும் சுற்றுச் சுவர்களில்லாமல் காலியிடமாக, மைதானமாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, அகால மரணம்,உடல்நலப் பாதிப்பு, மனநலப் பாதிப்பு தீய பழக்கங்கள் போன்ற தீய அமைப்புகளே நடைப்பெரும்.

  20. மனையில் வீட்டு அறைகளில் கூரை அமைப்புகளில் மேற்கில் தாழ்வாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, உடல்நலப் பாதிப்பு தவறான பாதையில் சென்று நற்ப்பெயர் இழப்பு, போன்ற தீய காரியங்களே ஏற்படும். மேற்கு பாகத்தில் திண்ணைகள் தரை மட்டத்தை விட தாழ்வாக இருந்தால் மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.

  21. வடமேற்கு மூலையில் வடக்கில் பாதைத் தாக்கம் இருந்தால் அது பெண்களின் உடல்நல பாதிப்பிற்கும், தவறான தீய பழக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.

  22. வாய்விய மனையில் மேற்கில் முகப்பு வாசலிலிருந்து ஈசானிய மூலை மறைத்து வீட்டை கட்டினால் அந்த வீட்டார் பொருளாதார தாழ்விற்கு ஆளாகி வீட்டை விற்க வேண்டி வரும்.

  23. வாய்விய மனையில் வடமேற்கில் வளர்ச்சியோ அல்லது அந்த பகுதி மறைத்து கட்டிடம் கட்டபட்டாலோ மன அமைதியின்றி அலைந்து திரிவார்கள் தற்கொலை போன்ற தவறான முடிவிற்கும் ஆளாவர்கள்.

  24. வடக்கு பார்த்த மனையில் வடக்கில் காலியிடமில்லாமல், தெற்கில் அதிக காலியிடமிருக்குமாறு அமைந்த வீட்டில் பெண் உடல்நல பாதிப்படைந்து உயிரிழக்கச் செய்யும் படியான தீயபலன்களே ஏற்படும்.

  25. வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.

  26. வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.

  27. வடகிழக்கில் கழிப்பிடம் போன்ற அமைப்புகளிருந்தல் வீட்டில் உள்ளோரிடயே கருத்து வேறுபாடுகளால் சண்டைச் சச்சரவுகள் அதனால் சுற்றுச் சுழலில் அவப்பெயர்கள், தவறான நடத்தைகள் பொருளாதார வீழ்ச்சி, உடல் நலக்குறைவு போன்ற தீயபலன்களே ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரத்திப்படி ஜன்னல்களுக்கான முக்கியத்துவம்


வீட்டின் வடக்குப் பகுதியில் ஜன்னல்கள் வைப்பது அவசியம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகள் ஜன்னல் வைக்க ஏற்றவை. குறிப்பாக, ஈசானிய மூலையில் ஜன்னல் வைத்தாக வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அப்போதுதான் அந்த வீடு விருத்தி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் பிராண வாயு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைத்தால் அதன் காரணமாக வீட்டில் பிராண வாயுவின் விகிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருப்பர். 

இதன் காரணமாகவே பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் பழங்காலத்தில் அமைத்தனர்.

சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு. 

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. காரணம் தென்மேற்கு திசையை குபேர மூலை (நைருதி) என்று வாஸ்து கூறுகிறது. அங்கு திறப்புகள் (ஜன்னல்கள்) இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். 

Tuesday, 22 July 2014

ஆடி அமாவாசை சிறப்பு

சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் வாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....

ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும் புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 

வாஸ்து Vs திருமண தடங்கல் ,தாமதம்

திருமண தடங்கல் ,தாமதம் போன்றவற்றிற்கு வாஸ்து கோளாறுகளும் முக்கிய காரணம்...ஒரு வீட்டில் சுப காரியமே செய்ய முடியவில்லை எனில் அது பெண்ணாக இருப்பின் அந்த வீட்டின் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டிருக்கும்...அந்த மூலையில் பாத்ரூம்,அல்லது கிணறு ,வாசல்,அல்லது தெருக்குத்து போன்றவை இருக்கலாம்...ஆணுக்கு திருமணம் ஆகவில்லை எனில் ஈசானிய மூலை பாதிக்கப்பட்டிருக்கும்...அல்லது கிழக்கில் பொது சுவர் இருக்கலாம்..அது போன்ற வீட்டை விட்டு வீடு மாறியபின் 
பலருக்கு சுபகாரியம் நடந்திருக்கிறது