Tuesday, 7 February 2017

'கர்மா' சென்ற சொல்

ஓம் நமோ நாராயணாய
இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்
ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யசூர் வேதத்தில் காணப்படும், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது

பூணூலை வலது தோளில் போடுவது ஏன்

பித்ரு காரியம் செய்யும் போது பூணூலை வலது தோளில் போடுவது ஏன்!ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய அருமையான விளக்கம்:
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிராத்தம்.
தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய வேண்டும்.
பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் (பூணூல்)வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் (பூணூல்)இரண்டும் இருக்கின்றன.
சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள்.
நேராகவே கடவுளிடம் போகிற பிற மதத்தவர்களுக்குசிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.
தெற்கு பித்ருக்கள் இருக்கும் பக்கம். 'தென்புலத்தார்' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா?
தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்.
' உத்தராயணம்' என்பதில் மூன்று சுழி
------------
'ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் '
------------
என்னும்போது இரண்டு சுழி 'ன' போட்டும் சொல்ல வேண்டும்.
'அயனம்' என்றால் மார்க்கம், வழி என்றும் அர்த்தம். 'உத்தர' என்பதில் வருகிற 'ர' காரத்தினால் 'ன' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது...
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.
நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான்.
அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம்(பூணூல்) அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
"பிரதக்ஷணம் பண்ணுவது" என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம்.
முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி

என் மனைவி என்னை ”என்னங்க”

என் மனைவி என்னை
பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க 
என்று அர்த்தம்.
சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.
கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா
என்று அர்த்தம்.
துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.
வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால்
சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம்.
சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.
கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.
நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.
என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் போனது
என்று அர்த்தம்....?
அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்
இவள் இன்றி என்
இவ்வுலகமே இராது.
இவள் என் மனைவி

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் (முன்னோர் மறைத்து வைத்த உண்மை) :

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் (முன்னோர் மறைத்து வைத்த உண்மை) :
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம்.
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது.
அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்து வைத்துள்ளனர்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.
எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியே மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதால் செல்வம் சேரவேண்டும் என அவர்களை வழிபடும் நாமும் குடும்பத்தில் சொத்து பத்து சேர ஜோதிட ரீதியாக நமது முன்னோர் வகுத்து வைத்த உண்மையினை கடைபிடிக்கலாமே!