Friday, 29 October 2021
முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள்
🌝 தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
Monday, 18 October 2021
ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது
*"சடாரி என்ற வார்த்தை எப்படி வந்தது அது தமிழ் வார்த்தையா?
நாம் அனைவருமே தெரிந்து கொள்வோம்..."*
ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார்.
இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.
உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
🔷🔹🔷🔹🌸🐚🌸🔹🔷🔹🔷
ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.
இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.
மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.
🌐💠🌀🔶✨🔔✨🔶🌀💠🌐
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.
அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.
சடாரியை தலையில் தாங்கினால்,
நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.
🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁
சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.
ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது,
சக்கரமும் சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருகன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள்.
🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚
அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.
பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.
சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும், என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்...
🌸🌿🌸🌿🌻🐚🌻🌿🌸🌿🌸
சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்...!!!
இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்...!!!
"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"
Sunday, 10 October 2021
கிராம்பு பலன்
தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. இதனுடன் கிராம்பு சேர்த்து சாப்பிடுவதால் பல ஆயுர்வேத நன்மைகள் உள்ளது.
கிராம்பில் பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. இத்தனை சத்துமிக்க கிராம்பை தினமும் காலையில் எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
இரவில் தூங்குவதற்கு முன் 1 கிராம்பு சாப்பிட்டு அதனுடன் 1 டம்ளர் சூடான நீரை குடிக்க வேண்டும். அது பலவகையான கடுமையான நோய்களை நீக்குகிறது. இதன் மூலம் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.
மேலும் இது பல வயிற்று பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் அமைகிறது. வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் அஜீரணம் போன்ற பல சிக்கல்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
தொண்டை புண் மற்றும் வலியைப் போக்க கிராம்பு உங்களுக்கு உதவும். கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் 1-2 கிராம்புகளை உட்கொள்வதால் இந்த பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளதால் முகத்தில் முகப்பரு வராமல் தடுக்கின்றது.
இது தவிர கிராம்பை உட்கொள்வதன் மூலம் மார்பு சளியையும் வெளியே கொண்டு வருகிறது. செரிமானம், பித்தம், வாயு பிரச்சனைகள், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், காலரா, தலைவலி, விக்கல் மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.