Friday, 10 December 2021

தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… என்னென்ன நன்மை இருக்குன்னு பாருங்க!

கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது அதன் பலன் இரட்டிப்பாகும்.


இந்திய வீடுகளில் உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக “கிராம்பு” உள்ளது. உடலுக்கு மந்திரம் போல் செயல்படும் இந்த அற்புத மருத்துவப் பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தது. Eugenol எனப்படும் ஒரு தனிமம் கிராம்புகளில் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து தீர்வு தர உதவுகிறது.




கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகளும் உள்ளன.

பொதுவாக, கிராம்பை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.

கிராம்புகளை எப்படி சாப்பிடுவது


கிராம்பு உள் மற்றும் தோலுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் பலன்களைப் பெற, இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.



கிராம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரின் ஆரோக்கிய நன்மைகள்


கிராம்புகளை இரவில் சாப்பிடுவது, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்கிறது.

கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.

பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீங்கும். இது பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.



கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

கை, கால் நடுங்கும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் கிடைக்கும்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குங்கவும்.

சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.



Wednesday, 8 December 2021

தர்மம் சாஸ்திரம்

🍀🍀தர்மம் சாஸ்திரம்.🍀🍀🍀🍀🍀
ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும், அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. 

இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்க போவோர் வருவோரை பார்த்து கொண்டு நிற்கிறது. 

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது. 

11வது, 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்து செல்ல, தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம், நாள் ஒன்றுக்கு 247 காத தூரம், பகலிலும், இரவிலும் செல்கிறது. 

இவ்வாறு நடந்து செல்லும் பொழுது, அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும். பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன், மாதத்தில் ஒரு நாள், அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். 

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின், ஒவ்வொரு மாதமுமம், இறந்த திதியன்று, மாசிகா பிண்டம் கொடுத்து, அந்த ஜீவனின் பசியை போக்கினால், உங்களை வாழ்த்தும். 

இவ்வாறு  12 மாதங்களும், வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து, அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். 
இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன், ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன், யமபுரத்தை அடைகிறது. 

*உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால், அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுப காரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.*

ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின், கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. 

அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின், சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

எளிய முறைய சரணாகதி விளக்கம்:-
மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை.
மாட்டுக்கு உயிர், அறிவு, இரண்டும் உண்டு. 

ஆனால், *வண்டிக்காரன்* உயிரில்லாத வண்டியை, அறிவுள்ள மாட்டுடன் பூட்டி, எந்த இடம் செல்ல
வேண்டும் என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...* *எவ்வளவு நேரம்...* *எவ்வளவு பாரம்...*
அனைத்தையும் *தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும், சுமப்பது தானாக இருந்தாலும், மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது. அது போல, உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி, ஈசன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்.

*அவனே தீர்மானிப்பவன்*
*அவன் இயக்குவான்..*
*மனிதன் இயங்குகிறான்*
👉*எவ்வளவு காலம்.. 
👉எவ்வளவு நேரம்.. 
👉எவ்வளவு பாரம்.. 
தீர்மானிப்பது  ஈசனே!*

இது தான் நமக்காக ஈசன் போட்டிருக்கும் *டிசைன்..*! 
இது தான் ஈசன் நமக்கு தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..! 
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை* *உணராதவனுக்கு* *அமைதி இல்லை*.
இருக்கும் காலங்களில்* *இனியது ஈசனடி போற்றி நற்கதி   பெருவோமே🌠