செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க திருவாதிரை அன்று விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள்... நல்லது நடக்கும்...
வருடம்தோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் திருவாதிரை கொண்டாடப்படுகின்றது. இந்ததிருவிழா1500 வருடங்களுக்கு முன்பு பழமையானது என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.சிவபெருமானுக்கு திருவாதிரை விழா முக்கியமானது. எனவே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயரும் கூறப்படுகிறது.
மாணிக்க வாசகர் திருவாசகத்திலும், திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பூம்பாவாய் பதிகத்திலும், திருநாவுக்கரசர் தேவாரத்தின் திருவாதிரை பதிகத்திலும் இந்த விழாவை பற்றி பாடியுள்ளனர். திருவாதிரையானதுதிருநெல்வேலி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக செப்பறை கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஏராளமான சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சில கோவில்களில் கொடியேற்றப்படுகிறது. சில கோவில்களில் காப்பு கட்டப்படுகிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் சிவன் கோவில்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இந்த விழா குறித்து பக்தர்பாலசுப்பிரமணியன் கூறுகையில், "திருநெல்வேலியில் எல்லா சிவன் கோவில்களிலும் இந்த விழாநடைபெறுகின்றது. சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள்நடைபெறுகின்றன. நடராஜர்ஆனந்த நடனத்தின் மூலம்படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கின்றார். தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் மொத்தம் 10 நாட்கள் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!
ஒன்பதாவது நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10வது நாள் கோவிலில் நடராஜருக்கு அபிஷகம்நடைபெறுகின்றது. வழிபாட்டின் போதுசந்தனம், பால், திருநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்புநடராஜருக்கு சந்தன காப்பு கட்டப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டால் நோய்இல்லாமல் வாழலாம். அதோடு செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!