Tuesday, 7 January 2025

திருவாதிரை விரதம்


செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க திருவாதிரை அன்று விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள்... நல்லது நடக்கும்...

வருடம்தோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் திருவாதிரை கொண்டாடப்படுகின்றது. இந்ததிருவிழா1500 வருடங்களுக்கு முன்பு பழமையானது என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.சிவபெருமானுக்கு திருவாதிரை விழா முக்கியமானது. எனவே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயரும் கூறப்படுகிறது.

மாணிக்க வாசகர் திருவாசகத்திலும், திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பூம்பாவாய் பதிகத்திலும், திருநாவுக்கரசர் தேவாரத்தின் திருவாதிரை பதிகத்திலும் இந்த விழாவை பற்றி பாடியுள்ளனர். திருவாதிரையானதுதிருநெல்வேலி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக செப்பறை கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஏராளமான சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சில கோவில்களில் கொடியேற்றப்படுகிறது. சில கோவில்களில் காப்பு கட்டப்படுகிறது.

தொடர்ந்து பத்து நாட்கள் சிவன் கோவில்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இந்த விழா குறித்து பக்தர்பாலசுப்பிரமணியன் கூறுகையில், "திருநெல்வேலியில் எல்லா சிவன் கோவில்களிலும் இந்த விழாநடைபெறுகின்றது. சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள்நடைபெறுகின்றன. நடராஜர்ஆனந்த நடனத்தின் மூலம்படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கின்றார். தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் மொத்தம் 10 நாட்கள் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!

ஒன்பதாவது நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10வது நாள் கோவிலில் நடராஜருக்கு அபிஷகம்நடைபெறுகின்றது. வழிபாட்டின் போதுசந்தனம், பால், திருநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்புநடராஜருக்கு சந்தன காப்பு கட்டப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டால் நோய்இல்லாமல் வாழலாம். அதோடு செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!


Saturday, 4 January 2025

காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்



காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்..

2024ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தார் போல் இருந்தது. ஆனால், அதற்குள் டிசம்பர் மாதம் முடிந்து, 2025ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. பொதுவாக புத்தாண்டு தொடங்கியபின் பலர் காலண்டர் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும். பலர், காலண்டர் வாங்கி, அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை கூட பார்ப்பர். அப்படி, நாம் எந்த திசையில் காலண்டரை மாட்ட வேண்டும் தெரியுமா? சரி, புது காலண்டர்களை வாங்கினால் பழைய காலண்டர்களை என்ன செய்வது? அதிலும் சாமி படங்கள் போட்டிருந்தால் என்ன செய்வது? இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.




வருடா வருடம் புதுப்புது விஷயங்கள் நம்மை சுற்றி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு புத்தாண்டும் மாறிக்கொண்டே இருப்பது, புதுப்புது காலண்டர்கள்தான். இந்த புத்தாண்டு காலண்டர்கள் யாரால் வழங்கப்பட்டாலும் முருகன், லட்சுமி, குபேரர், பெருமாள், கிரிஷ்ணன் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இப்படி நாம் வாங்கி வைக்கும் காலண்டர்களை வாஸ்து சாஸ்திரப்படிதான் மாட்டி வைக்க வேண்டுமாம்.
எந்த திசையில் மாட்ட வேண்டும்? 


புத்தாண்டுக்கு காலண்டர் மாட்டியவுடன், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியபடி மாட்ட வேண்டுமாம். அதிலும் குறிப்பாக அதில் சாமி படம் போடப்பட்டிருந்தால் சாமியின் முகம் வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் இருக்க வேண்டுமாம். இதன் காரணமாக வீட்டில் செல்வத்தின் வளர்ச்சி பெருகுவதுடன் தெய்வ அருளும் மேலோங்குமாம். அதே நேரத்தில், கேலண்டர் மாட்டக்கூடாத திசை என்ற ஒன்றும் இருக்கிறதாம். இதனை தெற்கு நோக்கியவாறு மாட்டவே கூடாதாம். அப்படி மாட்டினால், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியான வளர்ச்சிகளும் தடைபடுமாம். 


பலர் செய்யும் இன்னொரு தவறு, ஓரிரண்டு காலண்டரை தாண்டி, பல காலண்டர்களை வீட்டில் மாட்டி வைப்பது. இதனால் நாம் பலமுறை தேதிகளை கிழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படி, ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு நாம் தேதியை கிழிக்காமல் விட்டால் வீட்டில் எதுவும் முன்னேறாமல் இருக்குமாம். அதே போல, வீட்டில் இருப்பவர்கள் பல வித தடைகளையும் மன அழுத்தங்களையும் கூட சந்திப்பராம். 


பழைய காலண்டரை என்ன செய்வது? 



புது காலண்டரை மாட்டியவுடன், பழைய காலண்டரை என்ன செய்வது என்பதே பலருக்கு தெரியாது. அதே சமயத்தில் இந்த பழைய கேலண்டர்களை வீட்டிலேயேவும் வைத்திருக்க கூடாதாம். அதே சமயத்தில் அந்த காலண்டரில் சாமி படம் இருந்தால் அதனை குப்பையிலும் போடக்கூடாதாம். எனவே, அதில் இருக்கும் சாமி படத்தை மட்டும் தனியாக எடுத்து விட்டு மற்றவற்றை பழைய பேப்பர் கடையில் அல்லது குப்பையில் போடலாம். தேதி கிழிக்கும் கேலண்டராக இருந்தால் அதனை கோயில்களில் வைத்துவிடலாம். திருநீர்,குங்குமங்களை எடுப்பவர்கள் அந்த பேப்பரில் அதனை வைத்து எடுத்துச்செல்ல உதவும்.