ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.
1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.
2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.
3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.
4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.
5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.
6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்
7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.
9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.
10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.
11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்
12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.
13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.
14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.
15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை
16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்
17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்
18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.
19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்
20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது
அய்யா... வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். கார்த்திகைத் திருநாள் ஆசீர்வாதம் வேண்டி பதம் பணிகிறேன் அய்யா. தங்களுக்கும் கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன் அய்யா.
ReplyDeleteஅய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமை அய்யா.
ReplyDelete