Aldi means Albrecht Discount. It's a shortened form of the German "Albrecht-Diskont," combining the founders' last name, Albrecht, with the word "Diskont," meaning discount. The name reflects the store's origin as a German discount supermarket chain.
Rewe (stylized as REWE; German pronunciation: [ˈʁeːvə]) is a supermarket chain in Germany and the main brand of Rewe Group headquartered in Cologne
English, "Lidl store" refers to a discount grocery store chain that originated in Germany. Lidl is known for its focus on providing a wide range of products, including groceries and other household items, at competitive prices. The name "Lidl" is actually the surname of a former business partner of the founder, Josef Schwarz, according to CyprusScene.com, and the company was named after him.
Thu. 10, July , 2025 at 9.49 pm.
ReplyDelete*சைவ சித்தாந்தம் :*
*உடம்பின் வகைகள் பற்றி இன்று பார்க்கலாம்...!*
*உடம்பின் வகைகள் :*
*தத்துவங்களுள் மாயை ஆனது − உயிரின் *காரண சரீரம்* எனப்படும்.
*காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் ஐந்தின் தொகுதி − கஞ்சுக சரீரம் எனப்படும். (கஞ்சுகம் − சட்டை)
*மூலப் பிரக்ருதியின் முக்குணங்களும் விளங்கி நிற்கும் நிலை − குண சரீரம் ஆகும்.
*காரண, கஞ்சுக, குண ஆகிய 3 − சரீரமும் சேர்ந்து உயிருக்கு மிக நெருக்கமாய் அமைந்த நிலை − *பர சரீரம்.*
*பர சரீரத்திற்கு மேல் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரை − 5.
*மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் சேர்ந்து அமைவது − அகக்கரண சரீரம். (சூட்சும உடல்)
*8 − தத்துவங்களால் அகக்கரண சரிரம் அமைந்த நிலை − புரியட்டகம்.
*அகக்கரண சரீரம் என்பது − கனவு நிலையில் நமது உணர்வும், போக நுகர்ச்சியும் உண்டாக காரணமான சரீரத்தின் பெயர் + ஆயுள் முடிவில் உடலை உயிர் நீத்த பின் , பிரிதோர் உடலை எடுக்க காரணமான சரீரம்" அகக் கரண சரீரம்.
*நனவு நிலையில் போக நுகர்ச்சிக்கு காரணமாக அமையும் பருவுடம்பின் பெயர் − ஸ்தூல சரிரம் (உயிர்).
காரண சரீரம் − ஆனந்தமய கோசம்.
கஞ்சுக சரீரம் − விஞ்ஞானமய கோசம்
குண சரீரம் − மனோமய கோசம்
அகக் கரண சரீரம் − பிராணமய கோசம்
ஸ்தூல சரீரம் − அன்னமய கோசம்.
*பாசங்கள் நீங்கி நிற்றல் − முதல்வன் இலக்கணம்.
*பாசங்களில் கட்டுண்டு நிற்றல் − உயிர்களின் இலக்கணம்.
*மீளா அடிமை உனக்கே − என்றுரைத்தவர் நம்பியாரூரர் (சுந்தரர்).
[[ குறிப்பு : இந்த பாடல் வரிகள் அடங்கிய முழு பாடல், *ஏழாம் திருமுறையில் 95வது பதிகத்தில் உள்ளது.*
இந்தப் பதிகம் செந்துருத்தி பண்ணில் பாடப்பட்டுள்ளது. இந்தப் பதிகம் திருவாரூர் திருக்கோவிலை பற்றியது. ]]
*என்று நீ அன்று நான் உன்னடிமையல்லவோ − தாயுமானவர். [[ குறிப்பு : சுகவாரி − பாடல் − 7-ல் − 6−வது வரியாக அமைந்துள்ளன.]]
நீ என்று − நீ எப்பொழுது (இருந்தாய்)
அன்று நான் − அன்று நானும் இருந்தேன். (ஆதலால் நான்)
உன் அடிமை அல்லவோ − நான் உன் தொண்டன் அல்லவோ
கருத்து : வஸ்துவைப் போன்று ஆன்மாவும் நித்தியம் என்பனவாகையால்... என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ என்கிறார்.
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan438@gmail.com.
Mon. 4, Aug. 2025 at 10.22 pm.
ReplyDelete*கொங்கு மண்டல சிறப்பு :*
*பூங்கோதையார் :*
* தக்கையிசை ராமாயணம் இயற்றிய எம்பெருமான் கவிராயரது மனைவியார்... பூங்கோதை என்னும் மங்கையர்க்கரசி ஆவர்.
* ஒருநாள் புலவர் பெருமானைப் பார்க்கச் சில வித்வான்கள் அவர் மனையை அணுகினர். கவிராயர் வெளியிற் சென்றிருந்தனராதலின் வந்தோர் சல்லாபம் செய்து கொண்டிருந்தனர்.
அவற்றுட் பெண்கள் எவ்வளவு கற்றுணர்ந்தவர்களாயினும் முதிர்ந்த அறிவு பெறாதவர்கள் என்பதாய்ப் பெண்மக்களை இழித்துப் பேசினர்.
இதனை அம் மனையுள்ளிருந்து கேள்வியுற்ற இந் நங்கையார் பொறாராய் , ஒரு வெண்பா எழுதிய சிறு சீட்டை, ஒரு சிறுமி வசம் அனுப்பினார்.
இவ் வெண்பாவை வாசித்து வியப்புற்று, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேச நாணங் கொண்டு திகைத்து இருந்தனர்.
வெளியே சென்று வந்த பத்தர் பாடி , இவரை வரவேற்று நல்வரவு கூறிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சீட்டைப் புலவர்கள் காட்டினர்.
அவர் முறுவலித்து... ஆண்மக்களை இழித்துக் கூறலாமோ என மனைவியை வினவினார்.
அந் நங்கையார் மனையுளிருந்தே... ஐய, இகழவில்லையே...!
ஆன்மாவானது நீர்த்துளி வழி பூமியிற் சேர்ந்து உணவு வழியாகப் புருஷ கற்பத்துத் தங்கிப் பெண்ணின் கருப்பையுற்றுக் கற்பமுற்றிச் சிசு பிறக்கிறது என்பதை உபநிஷதம் முதலிய பேராதரவு காட்டி நிலை நிறுத்தினார்.
ஆதலின் பெண்கள் தாங்கள் கருக்கொண்டதை அறிந்து கொள்வது போல... ஆண்மக்கள் தாங்கள் கருப்பமுற்றதைத் தெரிந்திலர் என்றனர்.
உயிர்கள் அச்சுமாறிப் பிறத்தலை பிரமசூத்திரம் 3−ம் அத்தியாயம் 1−ஆம் பாதம் 1− ம் சூத்திரத்துக்கு "நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள்" அருளிய பாஷியத்துக்கும், சிவஞான போதம் 2−ஆம் சூத்திரத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
மேலுலகம் சென்ற உயிர்... திரும்பும் பொழுது முறையே... துறக்கம், மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்துப் புகுந்து வருவதைத் தியானித்தலே *பஞ்சாக்கினி வித்தை* எனக் கூறுகிறது.
சொர்க்கம் சென்ற ஆன்மா மேகத்து அடைந்து, மழைத் துளியாய்ப் பூமிக்கு வந்து, உணவுப் பொருளாய், புருஷ தேகத்தை அடைந்து, இந்திரிய மயமாய்ப் பெண்ணை அடைகின்றான் என விருத்தலால் புருஷ கர்ப்பத்தில் 2− மாதங்கள் தங்குகின்றன.
அதுசரி... நங்கையார்..சிறுமி வசம் கொடுத்தனுப்பிய வெண்பா தான் என்ன ? அறிந்து கொள்வோமா ?
*வெண்பா :*
அறிவி லிளைஞரே ஆண்மக்கண் மாதர்
அறிவின் முதிஞரே யாவர் − அறிகரியோ
தான் கொண்ட குலறிவர் தத்தைய ராண் மக்கள்
தான் கொண்ட சூலறியார் தான்.
இதுவே நங்கையார் கூறிய வெண்பா. இதன் விளக்கம் தான் மேற்கண்டவை.
குறுமுனி நேர் தமிழ் ஆழிஉண் வாணர் குழாம் வியப்ப
அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம் பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுமறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே.
அதாவது.... தமிழாகிய கடலை உண்ட அகத்திய முனிவரைப் போன்ற பல புலவர்களும் வியக்கும்படி... அறிவு இல்லாத இளைஞரே ஆண்மக்கள் என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரின் சிறிய இடையுடைய மனைவியார் (பூங்கோதையார்) வாழந்த குற்றமற்ற *சங்ககிரி* சேர்வதும் இக்கொங்கு மண்டலத்தில் ஆகும்.
என...கொங்கு மண்டலத்தின் சிறப்பை இங்கு நாம் காண்கிறோம்.
Jansikannan438@gmail.com.