Friday, 21 September 2012

லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சனி


லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சனி இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா?   

அதுபோன்று கூறிவிட முடியாது. ஏனென்றால் சனி லக்னத்தைப் பார்த்தால் தீர்க்க ஆயுசு யோகம் உண்டு. ஆயுட்காரகனான சனி லக்னத்தைப் பார்த்தால் இந்த யோகம் கிடைக்கும்.

ஆனால் லக்னாதிபதியை சனி பார்த்தால் முதுமையான தோற்றம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதாவது முகத்தில் மட்டுமே முதுமை தெரியும். ஒரு சிலரைப் பார்த்தால் வயதானது போல் தோன்றும். கண்கள் ஒளியிழந்து காணப்படும்.

ஆனால் அவர் சட்டையை சுழற்றினால் இளமையாகத் தெரிவார். எனவே அவரது முகத்தில்தான் முதுமை குடிகொண்டிருக்குமே தவிர உடலில் அல்ல.

No comments:

Post a Comment