செக்ஸ் ஹார்மோன் செய்யும் கலாட்டா!
மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் எண்ணற்ற வேலைகளை செய்கின்றன. ஆணுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் ஆண்மையை அதிகரிப்பதோடு செக்ஸ் உணர்வுகளை உற்சாகமாக வைத்திருக்கிறது.
என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த காதல் ஹார்மோன் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது.
அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன.
அதே சமயம் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது.
பெண்களுக்கும் முதலில் டெஸ்டோஸ்ட்ரோன் தான் உருவாகிறது,
பிறகு இது -ஈஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது.
அதற்கு தேவையான என்சைம்,
அரொமட்டேஸ் என்கிற ஒன்று.
இந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டோஸ்ட்ரோன், அத்தோடு நிற்காமல் ஈஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது.
இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது.
ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது.
அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.
ஆணாக பிறந்த எல்லோருக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் சுரக்கும்.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது சுரப்பது குறையும்.
ஆணுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் குறைவாக இருந்தால் ஆண்மைகுறைவும்,
பிள்ளை பெறுவதில் சிக்கலும் உருவாகும்.
உடற்பயிற்சி செய்தால் அது சுரப்பது அதிகரிக்கும்.
ஒருவர் செய்யும் வேலை,
உடற்பயிற்சி போன்றவற்றை பொறுத்து டெஸ்டோஸ்ட்ரோன் சுரத்தல் நாளுக்கு நாள் மாறுபடும்.
ஆனால் பொதுவாக அதிகம் டெஸ்டோஸ்ட்ரோன் சுரந்தால் அவருக்கு கட்டுமஸ்தான உடலும்,
உடலெங்கும் முடி வளர்ச்சியும்,
வழுக்கையும் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
முக்கியமாக பாலியல் உணர்வும் படுக்கை அறையில் செயல்பாடுகளும் உற்சாகமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராதாம்.
எனவே செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது பாலியல் உணர்வுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment