Wednesday, 26 September 2012

காதல் ரேகை

உங்கள் அன்புக்கு உரியவருடனான காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடியுமா? வாருங்கள் கைரேகை சாஸ்திரத்தை ஆராய்ந்து விடை தேடலாம். 

மேலே படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது தான் காதல் ரேகை. இந்த படத்தில் காட்டப்பட்டதைப் போல் ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் கூட சிலருக்கு இருக்கலாம்.

காதல் ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1. எத்தனை ரேகைகள் உள்ளன?

2. காதல் ரேகையில் நீளம் எவ்வளவு ?

3. காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ?

4. காதல் ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?

5. காதல்ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?

எந்த கை பார்க்க வேண்டும்?

நீங்கள் இயற்கையிலேயே எந்த கை பழக்கமுடியவரோ அந்த கையில் பார்க்க வேண்டும்.

இந்த ரேகையிலிருந்து நாம் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்?
 

எத்தனை ரேகைகள் உள்ளன?

உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை என்பதை இந்த காதல் ரேகை காட்டிவிடும். ஒன்றிற்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் உறவுகளை காட்டும்.

 

காதல்ரேகையில் நீளம் எவ்வளவு ?

காதல் ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும் என தெரிந்து கொள்ளலாம். நீளம் குறைவாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது. 

காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ?

காதல்ரேகை அல்லது காதல் ரேகை தடித்திருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெலிதாக இருந்தால் அது அந்த உறவின் ஆழமின்மியை குறிக்கும்.

காதல்ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?

காதல்ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது என்பது முக்கியம். அந்த திரும்பலை அப்படியே நீட்டித்தால் அது இதய ரேகையை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என கணிக்கலாம். 

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்லதற்கு இல்லை. சில பிரச்சினைளையே குறிக்கும். அது இல்லற வாழ்க்கை ( இல்லற இன்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகவோ அல்லது மன ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடும் பிரச்சினையாகவோ இருக்கலாம்.)

No comments:

Post a Comment