பயனுள்ள மருத்துவக் குறிப்புக்கள்
வேப்பமர பிசினை தூளாக்கி பசும்பாலில் உட்கொள்ள கரப்பான் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.
பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து கோலி குண்டு அளவு காலை – மாலை உட்கொள்ள குடல் பிணிகள் அகலும்.
கஸ்தூரி மஞ்சளை கருந்துளசி இலையுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் வெந்நீரில் நீராட எவ்வித சரும நோயும் வராது.
வெற்றிலையுடன் சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.
கசப்பான மருந்தை உட்கொள்ளும்போது வெத்திலைக் காம்பை சுவைத்தால் நன்றாக இருக்கும். குமட்டல் வராது.
வெற்றிலை வேர், கண்டங்கத்திரிவேர், ஆடா தொடை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் செய்து உட்கொண்டால் காசநோய் குறையும்.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்ள அஜீரணம் காரணமாக ஏற்படும் வாந்தி நிற்கும். வாயுத் தொல்லைகள் அகலும்.
வேப்பம் கொட்டைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படும்போது உருவாகும் வேப்பம் புண்ணாக்கை பலவிதமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
வேப்பிலையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மைப்புண்கள் மீது தடவ குணமடையும்.
வெற்றிலையும், மிளகும் அரைத்து பாக்களவு உட்கொண்டு பின் வெந்நீர் பருகினால் எல்லாவித விஷங்களும் முறியும்.
கருந்துளசி சாற்றை ஆட்டுப்பாலில் இரண்டு தேக்கரண்டி கலந்து காலை மாலை உட்கொண்டால் ஈரல் தொடர்பான குறைபாடுகள் அகலும்
This comment has been removed by the author.
ReplyDelete