Wednesday, 10 October 2012


மீன ராசி
பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, , ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
எட்டாமிடத்தில் சனி! எச்சரிக்கை தேவை இனி!
நேரம், காலம் பார்த்து செய்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!
வளைந்து கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள். அடுத்தவர்கள் மீது அதிக அளவு அன்பு செலுத்தி அதன் மூலம் ஏமாற்றங்களைச் சந்திப்பவர்களும் நீங்கள்தான்.
உங்கள் ராசிநாதனாக தேவகுரு அமைவதால், சமூகத்தில் உயர்ந்த மதிப்பும், மரியாதையும் உண்டு.
உங்கள் ராசிநாதனுக்கு எதிரியாக சுக்ரன் இருப்பதால், திருமண காலத்தில் அதிகபட்ச பொருத்தம் இருப்பதோடு, வரனின் ஜாதகத்தில் தெசா சந்தி இல்லாமல், லக்னப் படியும் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் தேர்ந்தெடுத்தால் தான் சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள இயலும்.
கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் கறாராக இருப்பீர்கள்.
குறிப்பாக உங்கள் ராசிநாதன் குரு இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் பணவரவும் பெருகும். பாராட்டும்படியான வாழ்க்கையும் அமையும்.
இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
அடியெடுத்து வைக்கிறது அஷ்டமத்துச்சனி!
மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு முறையாக, 2, 5, 10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் சனி, எதையும் திட்டமிட்டு செய்ய இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.
அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கத்தில் அடிக்கடி ஆரோக்யத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, நோய்க்கான அறிகுறி தெரியும் முன்பே அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி பனிரெண்டாமிடத்திற்கும் அதிபதி என்பதால், `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்என்பதற்கிணங்க, நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியைக் கொடுக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.
இருப்பினும், சனியின் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் உங்களுக்கு சந்தோஷங்களே நாளும் வந்து சேரவும், பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலவும், பிரச்சனைகளி லிருந்து விடுபடவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பதோடு, எட்டு எள்தீபம் ஏற்றி, சனி கவசம் பாடி சனி பகவானை வழிபட்டு வாருங்கள். கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் வனதுர்க்கை, மதுரை நகரின் மத்தியில் உள்ள நன்மை தருவார் கோவில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விஸ்வரூப நந்தீஸ்வரர் ஆகிய தெய்வ வழிபாடுகளை இது போன்ற காலங்களில் மேற்கொண்டால், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குல தெய்வ வழிபாட்டிலும் கவனத்தை செலுத்துங்கள்.
மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும் சேமிப்புகள் கரையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான்.
வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாயாக இருப்பதால், யோக பலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் எனப்படும் செவ்வாயும், ராசி நாதன் குருவும்தான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறார். எனவே சான் றோர்கள், ஆன்மீகப் பெரியோர்களிடம் ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெற்று நடப்பது நல்லது.
சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக தீரும். அவர்களின் உயர் கல்விக்காகச் செலவிடுவீர்கள். பூர்வீக சொத்துக் களில் இருந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரலாம். ஆனால் கூட்டாளிகள் சரியானவர்களா? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் சரியாக அமையாவிட்டால் ஏமாற்றத்தைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் அல்லவா? எனவே விழிப்புணர்ச்சி கூடுதலாகச் செலுத்த வேண்டிய நேரமிது. பெற்றோர்களின் உடல்நலத்திலும் கவனம் தேவை.
குருப்பெயர்ச்சிக் காலம்!
துலாம் ராசியில் சனிபகவான் சஞ் சரிக்கும் பொழுது மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 17.5.2012ல் ரிஷபத்திலும், 26.5.2013ல் மிதுனத்திலும் 13.6.2014ல் கடகத்திலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.
ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை பலத்தால் 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே கல்யாணக் கனவுகள் நனவாகும். கொடி கட்டிப் பறந்த குடும்ப பிரச்சனைகள் அகலும்.
மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும் ஆலங்குடியில் உள்ள குரு தெட்சிணாமூர்த்தி, திருவெண்காடு, மேதா தெட்சிணாமூர்த்தி, திருச்செந்தூர் முருகப் பெருமான் மற்றும் தெட்சிணாமூர்த்தி, திசைமாறிய தென்முகக் கடவுளான சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தெட்சிணாமூர்த்தி நெடுங்குடி கைலாச நாதர் திருக்கோவில் தெட்சிணாமூர்த்தி மற்றும் அறுபத்து மூவர் வழிபாடுகளையெல்லாம் தாராபலம் பெற்ற நாட்களில் செய்து வந்தால் தடைக் கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். இடைïறாக வந்த எதிரிகளும் விலகுவர்.
கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 9, 12 ஆகிய இடங்களில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவி வாய்ப்புகள் வந்து சேரும். வீடு கட்டிக் குடியேறும் முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
2.12.2012ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலாவரப் போகிறார்கள்.
முதல் ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
அடுத்த ராகு கேது பெயர்ச்சிக் காலத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் ஆகும் வாய்ப்பு கிட்டும். சுய ஜாதகம் வலுவாக இருந்தால் அந்நிய தேசப் பயணம் கூட கிட்டும். மன நிம்மதிக்கு கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் சென்று துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 2, 9-க்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் சிவகங்கை மாவட் டம் குன்றக்குடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆறுமுகப் பெருமான், வள்ளி -தெய்வானையையும் வழிபட்டு வாருங்கள்.
சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற
துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து, நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 11, 12-க்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால் வளர்ச்சியும், தளர்ச்சியும் இணைந்தே செயல்படும். 12-க்கு அதிபதி வக்ரமடைவது நல்லதுதான். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். லாபாதிபதி வக்ரம் பெறுவதால் உடனுக்குடன் அது செலவாகி விடும். எனவே இந்த வக்ரகாலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.
சனியின் சஞ்சாரப் பலன்கள்!
அஷ்மத்துச் சனியில் அதிக கவனம் தேவை!
இதுவரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், ஏராளமான குடும்பப் பிரச்சனைகளைச் சந்திக்க வைத்திருப்பார். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், லாபத்தைக் கொடுத்தாலும் இருமடங்கு விரயத்தையும் கொடுத் திருப்பார். வங்கிச் சேமிப்பு கரைந்திருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலைத் தொல்லைகளைக் கொடுத்து மனநிம்மதியையும் இழக்க வைத்திருக்கலாம்.
`எட்டில் சனி வந்தால்,
எதிர்பாரா மாற்றம் வரும்!
பெட்டிப் பணத்திற்கும்
பெரும் விரயம் காத்திருக்கும்!
ஒட்டும் உறவெல்லாம்,
ஒதுங்கிவிடும் என்றாலும்,
வெற்றி வர சனியதனை,
விரும்பி வணங்கிடுவீர்!’
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
சனியை நம்பினால் சந்தோஷம் கிடைக்கும். பணியில் ஏற்பட்ட தொய்வும் அகலும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும். வீடு மாற்றம், இடமாற்றங்கள், நாடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவைகள் விரும்பியபடியே அமையும்.
தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!
வியாழன் தோறும் விரதமிருந்து தெட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமை தோறும் அனுமனையும் வழிபடுவது நல்லது. சிவகங்கை மாவட்டம் இளையாற்றாங்குடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் நித்யகல்யாணிகைலாசநாதரையும், காரைக்குடி அருகில் இரும்பைத் தங்கமாக மாற்றிய திருக்கோவில் மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் பெரியநாயகி அம்மனையும், அங்குள்ள மாப்பிள்ளை நந்தியையும் வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டால் யோகங்கள் வந்து சேரும், பொன்னமராவதி அருகில் உள்ள சாம்பிராணி வடிவில் சாட்சி சொல்லிய வேலங்குடி கருப்பரை தாராபலம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள்.
சனியின் சந்நிதியில் வழிபடும் பொழுது,
எதிர்ப்புகள் விலகி ஓட,
இன்பங்கள் நாளும் சேர,
மதிப்புடன் வாழ-ஈசா!
மனங்கனிந்து அருள்வாயே! என்று பாடுங்கள்.
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

No comments:

Post a Comment