Thursday, 4 October 2012

மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!


பெண்கள் தங்களின் பருவம் எய்தும் காலத்தை எவ்வாறு ஒருவித அச்சத்துடன் எதிர்கொள்கின்றனரோ அதேபோல மெனோபாஸ் பருவத்தையும் ஒருவித கலவரத்துடனே எதிர்கொள்கின்றனர். அசதி, மனச்சோர்வு, இனிமேல் நமக்கு ஒன்றுமே இல்லையோ என்ற ஒருவித விரக்தியான நிலைக்கு சென்றுகின்றனர். இந்த கால கட்டத்தில் உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்களை சமாளித்தாலே மனரீதியாக ஏற்படும் சிக்கல்களை எளிதாக சமாளித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். மெனோபாஸ் காலத்தில் என்ன உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்றும் உணவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
வயதாக வயதாக உடல் தளர்வடைந்து விடும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடல் தளர்ச்சியை போக்க முடியும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மெனொபாஸ் காலத்தை சமாளிக்க உதவும்.
கால்சியம் உணவுகள்
வயதான காலத்தில் எலும்புகள் வலிமை குன்றிவிடும். எனவே கால்சியம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே எலும்பு உடைதல் நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். எனவே பால் சார்ந்த பொருட்களில் உயர்தர கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சோயாபீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்து அடங்கியுள்ளது. இதில் உள்ள டோஃபு தேவையான அளவு கால்சியம் உள்ளது. இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், ஐசோஃப்ளோவின் பெண்களுக்கு ஏற்றது.
இரும்புச்சத்து
ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் ரத்தசோகை நோய் தாக்குதல் ஏற்படும். இதற்கு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். மீன், கோழி, கறி, பச்சைக் காய்கறிகள், கீரைகள் ஆகியவைகளில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வைட்டமின், புரதம்
வைட்டமின் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மெனோபாஸ் காலத்திய சோர்வினை போக்க முடியும். உயர்தர புரதச்சத்துள்ள உணவுகள், பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கலர் கலராக உள்ள பழங்கள், காய்கறிகளில் எண்ணற்ற வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தாது உப்புக்கள், கால்சியம், போலிக் அமிலம், வைட்டமின் பி-6 அடங்கியுள்ளன. எனவே மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்கள் அதிக அளவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்
மெனோபாஸ் பருவத்தை எட்டியவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை போக்குகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.
மேலே கூறியுள்ள உணவுகளை சரியாக உட்கொண்டால் இதுவும் கடந்து போகும் என்று மெனோபாஸ் பருவத்தை ஈசியாக கடந்து விடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment