உடல் நலனில் தக்காளியின் பங்கு குறித்து பின்லாந்தை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 46 முதல் 65 வயது வரையிலான 1,031 பேர் அதில் பங்கேற்றனர்.
இவர்களில் தக்காளி மற்றும் தக்காளி சார்ந்த உணவு பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டவர்களுக்கு பக்கவாத நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.
தக்காளி சாற்றில் ‘லைகோபின்’ என்ற நச்சு உள்ளது. அது ரத்தத்தில் அதிக அளவில் கலப்பதால் பக்கவாத நோய் ஏற்படாமல் தடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment