"Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP)
சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு.
அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து
-0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர்.
GDP என்பது முதலீடுகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக வரவுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. Recession என்ற சரிவுக் காலத்தில் இந்த அனைத்து துறைகளுமே சரிவில் இருக்கும். நாடு திவாலாகிவிடும் நிலைக்கு தள்ளப்படும். வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment