Monday, 8 October 2012

கடன்

பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார்.

இவ்விடயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

லக்னாதிபதி பலவீனமாக இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட லக்னாதிபதிக்கு உரிய கோயில்கள், பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகையிலான தானங்களையும் மேற்கொள்ளலாம். 

இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால் தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே. 

தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

No comments:

Post a Comment