Saturday, 6 October 2012

காஜலை பயன்படுத்தும் முறை


முகத்திற்கு மேக்-கப் செய்யப் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் பல நிறைய வழிகளில் பயன்படுகிறது. அதிலும் கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஜல் நிறைய வழியில் பயன்படுகிறது. ஆனால் அதனைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே அதனை என்னவென்று தெரிந்து கொண்டு, தினமும் அவற்றை ஏதேனும் அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். இப்போது அது எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!
காஜலை பயன்படுத்தும் முறை:
* கண்களுக்கு அடியில் போடும் கண்மையாக காஜலைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவ்வாறு போட்டால் கண்கள் நன்கு பளிச்சென்று வெளிப்படும். இதனால் முகத்திற்கு ஒருவித அழகு ஏற்படும். மேலும் அவ்வாறு போடும் போது முகத்திற்கு ஏற்றவாறு அந்த காஜலைப் போட வேண்டும்.
* நெற்றியில் வைக்கும் பொட்டாகப் பயன்படுத்தலாம். அதிலும் இந்திய பெண்கள் பொட்டு வைக்காமல் இருந்தால், ஏதோ ஒரு குறை போன்று காணப்படும். மேலும் இந்த காஜலை வைத்து, இரு புருவத்திற்கு இடையிலும் ஒரு புள்ளி அல்லது வேண்டிய டிசைனை வரைந்துக் கொள்ளலாம்.
* காஜலை கண்களுக்கு ஒரு ஐஷேடோ போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு சிறிது காஜலை விரல்களால் எடுத்து, அதனை கண்களுக்கு மேல் லேசாக தடவி, ஒரு ஷேடோ போன்றும் உபயோகிக்கலாம். இதனால் கண்கள் சற்று அழகாக காணப்படும்.
* வெள்ளை முடிகள் இருந்தால், அவற்றை மறைக்கவும் காஜலைப் பயன்படுத்தலாம். இதனால் சிறிது நேரத்தில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்.
* புருவங்களை அழகான வடிவத்தோடு காண்பிக்க காஜல் மிகவும் சிறந்த பொருள். ஆகவே இந்த காஜலைக் கொண்டு புருவங்களை அழகாக முகத்திற்கு எடுப்பாக வடிவமைத்தால், முகமும் அழகாகத் தோன்றும்.
* தலையில் ஆங்காங்கு வலுக்கைப் போன்று காணப்பட்டால், அப்போது அவற்றை மறைக்க சிறிது காஜலை எடுத்து, அந்த இடத்தில் பயன்படுத்தி மறைக்கலாம். அதற்காக வலுக்கை பெரிதாக இருப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. சிறிய வலுக்கைக்கு மட்டும் பயன்படுத்தினால் தான் நன்றாக காணப்படும்.
ஆகவே இவ்வாறெல்லாம் பயன்படுத்தினால், நேரத்தையும் பணத்தையும் நன்றாக சேமிக்கலாம். மேலும் இது ஒரு சிறந்த மேக்-கப் டிப்ஸ் ஆக இருக்கும். மேலும் வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment