Monday, 19 November 2012

8வது இடத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பது சிக்கலை ஏற்படுத்துமா?


செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை எந்த வீட்டில் இருந்தாலும் அது அவ்வளவாக சிறப்பு பலனைத் தராது. இந்த சேர்க்கை காரணமாக பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். முறையற்ற உறவுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. இந்தச் சேர்க்கை உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும் என்று வேண்டுமானால் பொதுவாகக் கூறலாம்.

செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை குரு பார்த்தாலும் அல்லது செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் பலன்கள் மாறுபடும். அவர்களின் பாலியல் உணர்வு சாதாரணமாகவே இருக்கும்.

செவ்வாய், சுக்கிரனுடன், ராகு/கேது/சனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சேர்ந்திருந்தால் அவர்களின் பாலியல் உணர்வுகள் வக்கிரமடையும். பாலியல் நோய்களுக்கும் அவர்கள் உள்ளாவதற்கு வாய்ப்புள்ளது.

லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணிய அதிபதி ஆகியோரது நட்சத்திரத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை அமைந்திருந்தால், இந்தச் சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கிவிடும்.

ஒருவருக்கு 8வது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் அவருக்கு பாதிப்பு என்று கூற முடியாது. அவர் எந்த லக்னம் என்பதையும் பார்க்க வேண்டும். குறிப்பாக மேஷம், ரிஷப லக்னத்திற்கு 8இல் இந்த சேர்க்கை இருப்பது பாதிப்பை ஏற்படுத்தாது.

நவாம்சத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பதும் நல்லதல்ல என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் மேஷம், ரிஷபம் ஆகிய லக்னத்திற்கு இந்த சேர்க்கை பாதிப்பை ஏற்படுத்தாது. அதேவேளையில், கடகம், கன்னி, துலாம் ஆகிய லக்னத்தை உடையவர்களுக்கு இந்த சேர்க்கை அமைவது நல்லதல்ல.

எனவே ஒருவர் எந்த லக்னம், ராசி என்பதைப் பொறுத்தே மேற்கூறிய சேர்க்கைகளுக்கான பலன்களை கூற/அறிய முடியும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பவர்களுக்கு செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை வரும் போதுதான் பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். அந்தக் காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அதன் பின்னர் பிரச்சனைகள் வராது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment