Thursday, 1 November 2012

குரு சந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும்குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரைஇருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன்தீர்க்கமானசிந்தனைஎதிலும் நேர்வழியை கடைபிடிப்பதுநீண்ட ஆயுள்சத்தியம் தவறாமைமனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர்மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.
சந்திரன் ஆட்சி பெறுவதாலும்குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும்நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும்ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.
பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள்எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

No comments:

Post a Comment