Wednesday, 28 November 2012

இஸ்கான் கோயில், அயர்லாந்து


இஸ்கான் கோயில், அயர்லாந்து

மே 31,2008  IST
இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.
இங்கு வசிக்கு பக்தர்கள் அதிகாலை வேளையில் எழுந்து கிருஷ்ண பக்தி பாடல்கள், தியான மந்திரங்களை கூறுகின்றனர். மேலும் 5 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இலக்கியங்கள் குறித்து விவாதம் நடத்துகின்றனர். இந்த இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும்.
கோயிலுக்கு செல்லும் வழி : பெல்ஃபாஸ்ட் அல்லது டப்ளினில் இருந்து கார் அல்லது பஸ் மூலம் செல்லலாம். டப்ளினில் இருந்து டாக்சியில் செல்ல தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 087 2561243
முகவரி: Derrylin, County Fermanagh, Ireland, தொலைபேசி +44 (0)28 6772 1512

No comments:

Post a Comment