Friday 16 November 2012

தாலி பெயர்காரணம்


இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத்திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள், 
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலிஇருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற பெயர் உபயோகப்படு த்தப்பட்டது என்கிறது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளி யிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்த கம். மாங்கல்யச் சரடானது ஒன்ப து இழைகளைக் கொண் டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொ ரு நற்குணங்களைக்குறிக்கிறது.
தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன் னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு அணியப் படுகிறது.
பெயர்காரணம்
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றை யே பண்டைக்காலத்தில் மண மகன் மணமகள் கழுத்தில் கட்டி வந் தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினா ல் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்த ரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய் து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப்போடுவது கூடத்தாலிதா ன். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்ற வைத்த மஞ் சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலிஎன்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மக ளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்து கொள்வ தாக அனைவரும் கையொப் பமிட அந்த தாளினை கயிற்றி ல் கோர்த்து மணமகளின் கழு த்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவ ணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறி க்கும்.
தாலி சம்பிரதாயங்கள்
தமிழர் வாழ்வில் எழுதப்படா த சட்டமாகவும் சாஸ்திரமா கவும் ஆகி விட்ட திருமாங்க ல்யம் கணவன் மனைவி பந்த த்தை வலுவுடையதாக்கி குடு ம்ப உறுதிப்பாட்டுக்கு  அடித்த ளமிடுகின்றது.
தாலி என்பது சமூக, பண்பா ட்டு, சமய வெளிப்பாடாக பார்த்தல் வேண்டும். கணவன் மனைவியி டையே உருவாகும் ஆழமான அன்பையும் விருப்பையும் கணவனின் நீண்ட ஆயுளையும் குறித்து நிற்கின்றது. மனைவியின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி, என க்குச் சொந்தமானவள், இவள் கண் களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வராது பாதுகாக்க வேண்டியது என து கடமை என நினை க்கிறான். தாலி யைச் சுமந்தி ருக்கும் மனை வியோ இவன் என்னை மணந்து எனக்குப் புதிய வாழ் வு தந்தவன், அவனுக்கு உரி யவளாக நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவருக்குமிடையே யுள்ள பந்தத்தை வலுவுடையதாக்கி குடும்ப அமைப்புக்கு அடித்தள மிடுகின்றன.
தாலிப் பொருத்தம் 
திருமண ஜாதகப் பொருத்தத்தில் தாலிப் பொருத்தம் முக்கியமானது.அது கணவனின் ஆயுளுட ன் சம்பந்தப்பட்டது என்ற நம்பிக்கை பலமாக நம்மி டத்தில் உண்டு. உத்தம பொ ருத்தமாக இருந்தால் பொது வாக பிள்ளையார் தாலி அணிவார்கள். மத் திம பொருத்தமாக இரு ந்தால் யாரை குலதெய்வ மாக வணங்குகிறார்களோ அந்தத் தெய்வத்தை தாலியாக செய்து போட்டால் மத்திம ஆயுள்தோசம் அகன்று விடுகிறது என்று சாஸ் திரம் சொல்கிறது. 
இப்படித்தான் தாலி இருக்க வேண்டும் என்று ஒரு விதி கிடையாது.பிள்ளையார் தாலி எனும்போது ஆரம்பத்தில் தும்பி க்கை வடிவம் தான் பொறித்தார்கள். பின்னர் ஆசா ரியாரின் கற்பனைத்திறன், வேலைத்திறனுக்கு ஏற்ப வடிவங்களும் டிசைன்களும் அதிகரித்தன. தாலி வடிவங்களை வைத்துக் கொண்டு அவற்றை பிள்ளையார் தாலி (தும்பிக்கை வடிவம்), சிவன் தாலி (லிங்க வடிவம்), அம்மன் தாலி (அம்மன் வடி வம்), தேர்த்தாலி (தேர் வடிவம்), புறாத்தாலி (விரிந்த புறாவின் வடி வம்), இராமர் தாலி (சங்கு சக்கரம் வடிவம்) பொட்டுத் தாலி என பல புழக்கத்தில் உள்ளன.
பொதுவாக கிறிஸ்தவர்கள் புறாத்தாலி அணிவார்கள். சிலர் வேதாகமத்தில் புறா வடிவம் வைப் பார்கள். இந்த இரண்டையும் அடிப்படை யாக வைத்துக் கொண்டு வித்தியாசமான டி சைன்கள் செய்யப்படுகின்ற ன. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் சவடி அணிவார்க ள். ஆரம் போன்ற வடிவத்திற் கு பல்வேறு டிசைன்கள் அமை ப்பார்கள். முஸ்லிம்கள் சவடியை சங்கிலியில் கோர்த்து அணிவது ம் தமிழர்கள், கிறிஸ்தவர்கள் கொடியில் கோர்த்தும் அணிவது வழ மை. பிள்ளையார் தாலியை விட, லிங்கத் தாலியே மலையகத்தில்அதிகளவில் அணியப்படுகிறது. தற்போது கல் வைத்து செய்த திரு மாங்கல்யமும் புழக்கத்திற்கு வந்து விட்டது. 
தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமாங்கல்யம் எழுதப்படாத சட்டமாகவும் சாஸ்திரமாகவும் ஆகி விட்டது என்பது புறக்கணிக் க முடியாத உண்மை. 
தாலி சுவாரஸ்யங்கள்
1. தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோ ர் யாராவது தும்முதல், அபசகுண வார்த்தைகள் பேசுதல் போ ன்றவை மணமக்களிற்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே!
2. தாலி கட்டப்படும் போது தூவப்படும் அட்சதை மணமக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற் கும் ஆசீர்வதிப்ப தாகும்.
3 .ஒரு பிள்ளை பெற்றாள் உடனே செத்தாள் என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்கு தெய்வ குணமும் பெண்ணின் குணமும் உள்ளது. எனவே வாழையை பெண்ணாக எண்ணி வாழைக்கு தாலி கட்டினால் மணமுறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு ஜாதக த்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்யலாம்.
4. தேவலோகத்தில் கழுதை தேவரின் வடிவமாக மதிக்கப்படுகிறதா ம். அதனால் கழுதைக்கு தாலி கட்டினால் மழை பெய்யுமாம்.

No comments:

Post a Comment