Friday, 23 November 2012

உலக அழிவு ! இப்ப வருமோ ? எப்ப வருமோ ?

உலக அழிவு எப்போ?
மாயன் கேலண்டர், நாஸ்ட்ரோ டாமஸ்,பைபிள் என்று எதை எதையோ மேற்கோல் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலக அழிவு நிச்சயம் என்று பிரச்சாரம் நடக்கிறது. இதே கருத்தை வலியுறுத்தி ஒரு சினிமாவும் வெளி வந்து சக்கை போடு போடுகிறது. மொத்தத்தில் இதெல்லாம் என்ன ? உண்மையா ? பீலாவா ? என்ற விவாதத்தில் ஒரு ஜோதிடன் என்ற வகையிலும் தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் என்ற டைட்டிலுடன் நான் வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் பற்றிய தகவல்களை அறிந்தவன் என்ற முறையில் சில வரிகளை இப்பதிவில் எழுதுகிறேன். 

நாஸ்ட்ரோ டாமஸ் தி செஞ்சுரீஸ் எழுதியதைபோல் பிரம்மங்காரு காலஞானம் என்ற நூலை எழுதியுள்ளார். (ஓலை சுவடிகளில்) . நான் அறிந்த வரை அது கிபி1900 முதல் 2008 வரையிலான எதிர்கால குறிப்புகள். அவர் தன் கணிப்புகளை கூறும்போது தமிழ்/தெலுங்கு வருடங்களை கொண்டே குறிப்பிடுகிறார். இவற்றில் உள்ள லொள்ளு என்னவென்றால் 60 ஆண்டுகள் முடிந்த பின் அதே வருடம் ரிப்பீட் ஆகும்

அவர் என்னவோ டீட்டெயில்டாகவே எழுதியுள்ளார் திதி,வாரம், நட்சத்திரம் கூட சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த அமைப்பு 60 வருடங்கள் கழித்து கூட வரலாம். காலஞானத்தின் சாரம் மேற்சொன்ன 1900 முதல் 2008 க்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்து 1 பாகம் மட்டும் மிஞ்சும் என்பதே. ( மூல பாடமான சுவடியை நான் வாசனைகூட பார்த்ததில்லை. இது குறித்த பல புத்தகங்களை படித்துள்ளேன் தட்ஸ் ஆல்)

அவர் அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . அழிவு ஏற்படுவதற்கு முன்பு 
1.காஞ்சி காமாட்சி ரத்தம் கக்குவாள்
2. அவள் முலையிலிருந்து பால் வடியும்
3.ஹம்பியில் உள்ள நந்தி சிலை உயிர் பெற்று துள்ளி குதிக்கும்
4.கிருஷ்ணா நதி விஜய வாடா கனகதுர்கா மூக்குத்தியை நனைக்கும் 
5.ஒரே நேரத்தில் 7 பிரபல நகரங்கள் சூறையாடப்படும்

அவர் அழிவுக்கு முன்னோடியாக குறிப்பிட்டுள்ள விசயங்கள் இன்னும் நடை பெறவில்லை 

அதே நேரத்தில் 2008 உகாதி எப்போதோ முடிந்து விட்டது. எனவே அவரது கணிப்புகளை கடந்த 108 வருடங்களுக்கு பொருத்திப்பார்த்தது தவறாக இருக்கலாம். அதில் உள்ள சம்பவங்கள் 60 வ/120வ/180 வ இப்படி 60ன் மடங்கு வருடங்கள் கழித்து நடக்கலாம். இத்தனை உறுதியாக கூற காரணம் முதற்கண் அவரது கொள்கைகள்
1.பிராமணீயத்தை,பார்ப்பன அகங்காரத்தை கண்டித்தார். தமது தவ வலிமையால் ஒரு அக்கிரகாரத்தையே தீப்பிடித்து எரியச்செய்தார்
2.விக்கிரக வழிபாட்டை கிண்டலடித்தார்
3.ஸ்கேன் வசதியில்லாத அந்த காலத்திலேயே கருவில் குழந்தையின் வளர்ச்சியை படிப்படியாக நேரில் கண்டாற்போல் வருணித்துள்ளார்
4.தீண்டாமையை எதிர்த்தார். கக்கன் என்பவனின் மனைவியை (சக்கிலிய இனப் பெண்ணை சிஷ்யையாக ஏற்றார்)
5. மத வேறுபாட்டை எதிர்த்தார். சித்தய்யா என்ற முஸ்லீமை சீடனாக ஏற்றார். பிரம்மத்தை மிஞ்சின குருவில்லை , சித்தய்யவை மிஞ்சின சிஷ்யனில்லை என்ற புது பொழியை தோற்றுவித்தார்.

அதே சமயத்தில் காலஞானம் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்கள் 1900 முதல் 2008 இடைப்பட்ட காலத்தில் நடந்தன‌
1.விதவை அரசாள்வாள் (இந்திரா)
2.தண்ணீரில் விளக்கெரியும் (ஹைட்ரோ பவர்) 
3.மனிதர்கள் வானில் பறப்பர் (விமானம்)
4.வர்ணாசிரம தருமம் (கருமம்) அழியும்
5.பார்ப்பனர்கள் செருப்படி படுவர்

இன்னும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் காலஞானப்படியே நடந்துள்ளன. சரித்திரம் பித்தனை போல் ஒன்றையே உளறுகிறது என்பதற்கேற்ப இந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறதா ? பிரம்மங்காரு இன்றைய சங்கராச்சாரிகள் போல தண்டதீனி தின்று வலம் வரவில்லை. அவர் தமது குலத்தொழிலை தொடர்ந்து செய்துவந்தார். (செம்பு,பித்தளை வார்ப்பு தொழில்) .வெற்று வேதாந்தங்களை அள்ளி விடவில்லை.இன்றும் அவரது இருப்பை என்னால் உணரமுடிந்தது. முடிகிறது. ஆனால் காலம் என்பது அடர்ந்த,உறைந்த ரகசியம். அதை பிளந்து அறியுமத்தனை ஞானம் நமக்கு கிடையாதுங்கோவ் !

நானேனும் பரவாயில்லை தர்க்க ரீதியில் காலஞானத்தை ஆராய்ந்து 2009 மார்ச்சுக்குள் உலகின் ஏழில் 6 பாகம் அழிந்து ஒரு பாகம் தான் மிஞ்சும் என்று குன்சாக ஒரு பதிவை போட்டிருந்தேன். நேருவிடம் பி.ஏவாக இருந்தேன் என்று அலட்டு டாக்டர் வேதவியாஸ் என்ற பிராமண அறிவு ஜீவி 1999 ல் உலக அழிவு நிச்சயம் என்று ஒரு புத்தகமே எழுதி சுண்டல் மாதிரி விற்றுதீர்த்துவிட்டார்,.

No comments:

Post a Comment