Monday, 12 November 2012

பெண்களின் வாரிசு யோகம்


பெண்களின் வாரிசு யோகம்



ஒரு பெண்ணானவள் தாய்மை அடைவதன் மூலமே முழுமையடைகிறாள். அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக வேண்டும். அப்பொழுதுதான் அவளின் குடும்பத்தாரும் நமக்கென ஒரு வாரிசை உருவாக்கித் தந்திருக்கிறாள் என பெருமையுடன் நடத்துவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5, 9 ம் வீடானது, அவளுக்கு அமையும் குழந்தை யோகத்தைப் பற்றி அறிய உதவுகிறது. 5,9ம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறப்பான குழந்தை யோகம் உண்டாகும். அதுவே சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் பகை பெற்று 5, 9 ல் இருந்தாலும், 5, 9 ம் அதிபதியும் குருவும் பலவீனமாக இருந்தாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.

No comments:

Post a Comment