Thursday 15 November 2012

நெற்றி பொட்டு


பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில்வைக்கும் குங்குமப்பொட்டின் அழ கே தனி என்று தான் சொல்ல வே ண்டும். ஒவ்வொருவரும் தங்களி ன் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். 
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத் திற னும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக்கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும்.
அதிலும் முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின் காந்த அலைக ளை வெளியிடுவதில் முக் கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலை வலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப் போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வது ண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக் கக்கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகை க்குப் பின்னர் மங் கையர்கள் பல வித டிசைன்க ளில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதா க இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட் டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டு களை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரி க்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீள் வடிவ பொட்டு

வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொ ட்டுகளை உபயோகிக்க வேண்டும். நீளமா ன பொட்டு இவர்களது உருண்டை முகத் தை சற்று நீளவாக்காக மாற் றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத் தியில் பொட்டு வைக்கவேண்டும்.
இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தி யாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கு ம். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீள மான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு

ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட் டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிக முள்ள பொட்டுகளை வை த்துக்கொள்ள லாம். உருண்டை மற்றும் முட்டை வடிவி லான பொட்டுகள் இவர்களுக்கு பொருத் தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இரு க்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவமுகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லா வகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுக ளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டி மீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டு ம்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைக ளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.
பொட்டு வைப்பதால் சருமத்தில் பிரச்சினை ஏற்படுமா?
பொட்டு வைப்பதில்பொதுவாக பிரச்சினைகள் ஏற் படுவதில்லை. ஆனால் பொட்டுகளை ஒட்ட வைக் கும் பசையின் தரத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவ துண்டு. ரசாயன பொருளால் உருவாக்கப்பட்டிருக் கும் பசை, தொடர்ந்து நெற்றியில் ஒட்டியிருக்கும் போது அப்பகுதி நிறம்மாறி, வடு உருவாகிவிடும்.

1 comment: