Monday, 12 November 2012

பெண் குழந்தை யோகம்


பெண் குழந்தை யோகம்

பெண் குழந்தை என்றாலே கருவிலேயே கலைத்து விடக்கூடிய அவலநிலையும், கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் சூழ்நிலைகளும் மாறி ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை உண்டாகி உள்ளதால், பெண் குழந்தைகளைபெற்றெடுக்கும் யோகம் யாருக்கு என பார்க்கின்ற போது, நவகிரகங்களில் பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், சுக்கிரன் ஆகியவை 5,9 ல் வலுவாக அமைந்தாலும், 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும் அழகிய பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல 5,9 க்கு அதிபதிகள் ரிஷபம், துலாம், கடகம் ஆகிய பெண்கிரக வீடுகளில் இருந்தாலும் சிறப்பான பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

ஒரு பெண்ணானவள் தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம் அவள் மறு ஜென்மம் எடுப்பதாகவே கருதப் படுகிறாள். பிரசவம் என்பது சுலபமாக இருந்தால்தான் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க முடியும். அதுவே பிரசவம் சுலபமாக இல்லையென்றால் பெண்ணுக்கும் பிரச்சினை, பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சினையாக அமைந்து விடுகின்றது. இப்படி பல கஷ்டங்களையும் தாண்டி மென்மையான பெண்மை தாய்மையை அடைகிறது. அதனால் பெண்மையே புனிதமாகிறது.

2 comments: