Monday, 26 November 2012

வேதப்படி கணபதி கடவுள் இல்லை?.

வேதப்படி கணபதி கடவுள் இல்லை?.

மிருகங்களை வழிபடுதல்.


வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால், நான் முன்பே சொல்லியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்த வழிபாட்டு முறைகளில் முக்கியமான இரண்டாவது வழிபாட்டு முறை Totamism Worhip அதாவது மிருகங்களை வழிபடுதல்

அப்படியாகத்தான் ‘ஒரு காலத்தில் காட்டுக்குள் வாழ்ந்த மக்கள் வித்தியாசமான, பெரிய உருவம் கொண்ட யானைகளை பயந்து வழிபடத் தொடங்கினார்கள்.

நாம் மனித உடலில் யானைகளை வைத்ததுபோல்... எகிப்தில் பல மிருகங்களை வழிபட்டு வருகின்றனர். இதுதான் கணபதியின் வரலாற்றுக் கதை. 

கணபதி என்றவுடன்... இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி... என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்...? ரிக்வேதத்தின் இந்த மந்த்ரத்தைப் பாருங்கள்.

“கணானந்தவா கணபதிஹிம் ஷவாமஹேகவிகம் கவினாம் உபமஸ் ஸ்ரவஸ்தமம்தேஷ்டராஜம் ப்ரம்மனாம் ப்ரம்மனாஸ்பதி” 

வேதத்தில், வேதகாலத்தில் மக்கள், ரிஷிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் போவார்கள்.

அப்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பார்கள். அதாவது Leader of the Group. கணபதி என்றால் இதுதான் அர்த்தம். அந்த சிறுசிறு கூட்டங்களின் தலைவர்கள்தான் கணபதிகள். 


இதுபோல் வேதம் நிறைய கணபதிகளைக் காட்டுகிறது. 

‘ஏ... தலைவா... உன் தலைமையில் நாங்கள் நடந்தால் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும். செல்வம் பெருகும்...’ என தங்கள் தலைவனை போற்றிப் புகழ்வதுதான் இந்த மந்த்ரம். இந்த Leader of the Group- அய்த்தான் பிற்காலங்களில் கணபதி என்ற கடவுள் ஆக்கிவிட்டார்கள். 

வேதப்படி கணபதி கடவுள் இல்லை. 

பெண்கள் விஷயத்தில் நமது கடவுளர்களின் கண்ணியத் தன்மையையும் இந்த கண்ணியத் தன்மையாலேயே இன்னொரு கடவுள் உதித்ததையும் கண்டோம்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்... நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரத்தான்...உணர்ந்து விட்டீர்களானால்..

No comments:

Post a Comment