Monday 10 December 2012

சன்னியாச யோகம்

நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட கிரகங்கள் வலிவாய் ஒரே ராசியிலிருக்கப் பிறந்தவன் சன்னி யாசியாவான். சன்னியாசியின் 
வகுப்புக்களை அடியிற் கண்டபடி வராஹ மிஹரர் கூறுகிறார். 

1. சூரியன் எல்லா கிரகங்களை விட வலி வாயிருந்தால் யாசன வகுப்பு. 

2. சந்திரன் எல்லா கிரகங்களைவிட வலி வாயிருந்தால் விருத்தாஸ்வர வகுப்பு. 

3. செவ்வாய் எல்லா கிரகங்களை விட வலிவாயிருந்தால் சாக்கிய வகுப்பு. 

4. புதன் எல்லா கிரகங்களைவிட வலிவாயிருந்தால் ஆஜிவிசு வகுப்பு. 

5. குரு எல்லா கிரகங்களைவிட வலிவாயிருந்தால் பிக்ஷுக வகுப்பு.

6. சுக்கிரன் எல்லா கிரகங்களைவிட வலிவாயிருந்தால் சரக வகுப்பு.

7. சனி எல்லா கிரகங்களைவிட வலி வாயிருந்தால் நிர்கிரந்த வகுப்பு ஆகும். 

இப்படிப்பட்ட கூட்டு கிரகங்களில் மிகவும் வலிவுள்ள கிரகம் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்த கிரகமானால் சன்னி யாசி, கொஞ்ச காலம் பொருத்து தான் முந்தியிருந்த வாழ்க்கைக்கு மறுபடியும் திரும்பிவந்து சேருவான். 

4, 5, 6, 7 கிரகங்கள் கூட்டமாய் இருக்கும்போது அவைகளில் ஒரு கிரகம் கூட வலிவில்லாமல் இருந்தால் சன்னியாச யோகம் என்று சொல்லப்பட்ட பிரவிரஜ்யா யோகம் கிடையாது. கூட்டு கிரகங்களில் பல கிரகங்கள் வலிவாயிருந்தால் மிகவும் வலிவுள்ள கிரகத்தின் திசையில் சன்னியாசி வேடந்தரிப் பான். அந்தக் கிரகத்திற்குரிய வகுப்பைச் சார்ந்தவன். 

சன்னி யாசியாவான். அடுத்த கிரகத்தின் திசை, அந்தத் திசை காலங்களில் அந்த கிரகத்திற்குரிய வகுப்பைச் சார்ந்த சன்னியாசியாக மாறுவான். 

1. சாக்கிய வகுப்பு என்பது சிகப்பு வஸ்திரந்தரித்த பௌத்த மத சன்னியாசி. 

2. அஜீவிக வகுப்பு என்பது சமண மதத்தை அல்லது வைஷணவ மதத்தைச் சார்ந்த சன்னியாசி. 

3. பிக்ஷுக வகுப்பு என்பது பிராம்மண சன்னியாசி. 

4. விருத்தஸ்வராவக வகுப்பு என்பது சிவயோகி. 

5. நிர்க்கிரந்த வகுப்பு என்பது நிர்வாணமாயுள்ள சன்னியாசி. 

6. சரக வகுப்பு என்பது சக்கிரந்தரித்த சன்னியாசி. 

7. வன்யாசன வகுப்பு காட்டிலுள்ள கனி, கிழங்குகளைப் புசித்து போக நிலையிலிருக்கும் சன்னியாசியாகும். 

மிகவும் வலிவுள்ள கிரகம் அஸ்தங்கதமடைந்திருந்தால் யோகியாகாமல் யோகிகளுடன் சிநேகஞ் செய்பவனாயிருப்பான். மிகவும் வலிவுள்ள கிரகம் கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்த போது மற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டால் யோகியாக மாட்டான். 

சந்திரனிருக்கும் இராசியாதிபதி சனியைப் பார்த்தாலும், இதர கிரகங்களால் பார்க்கப்படாமலிருந்தால் அல்லது சந்திரனிருக்கும் இராசி யாதிபதி பலமில்லாமலிருந்து சனியால் பார்க்கப்பட்டாலும் சன்னி யாசியாவான். சந்திரன் சனித்திரேக்காணத்திலிருந்து, செவ்வாயின் நவாம்சை அல்லது சனியின் நவாம்சையிலிருந்து சனியால் பார்க்கப் பட்டால் சன்னியாசியாவான். சனிக்குரிய சன்னியாசம் பெறுவான். 

லக்னம், சந்திரன், குரு இவர்களைச் சனி பார்த்தும், 9ஆம் வீட்டிலி ருந்த குருவை சனி பார்த்தும், இராஜயோகங்களில் ஒன்று அமையும் படியாய்ப் பிறந்தவன் சாஸ்திரங்களை கண்டுபிடித்து கிரந்தங்களை எழுதும் கிரந்த கர்த்தராவான். லக்னத்திற்கு 9ஆம் வீட்டில் சனியிரு ந்து, இந்த சனியை மற்ற கிரகங்கள் பார்க்காமலிருந்து இராஜயோகம் அமையப் பிறந்தவன் ராஜாதி ராஜனாகவும், சன்னியாசி யோகமுட னும் இருப்பான். இராஜயோகமும், சன்னியாசி யோகமும் சரியாய் இருந்தால் சாஸ்திரங்களை எழுதும் யோகியாவான். இராஜ யோகமும் சன்னியாசி யோகமும் கலந்திருந்து, இராஜ யோகம் சன்னியாசி யோ கத்தை விட அதிகமாயிருந்தால், முதலில் சக்ரவர்த்தி யாயிருந்து பின்பு சன்னியாசியாவான்.

No comments:

Post a Comment