Saturday, 29 December 2012

முகூர்த்த நாட்கள் குறிக்கும் பேது கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியங்௧ள்

முகூர்த்த நாட்கள் குறிக்கும் பேது கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியங்௧ள்


முகூர்த்த நாட்கள் குறிக்கும் பேது கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியங்௧ள்

1.பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா?

பிறந்த நாள் என்பது இங்கு நட்சத்திரத்தையே குறிக்கும் சிலர் ஆங்கிலத்தேதியையும், அல்லது கிழமையையும் நாள் என்று தவகறாகப்புரிந்து கொள்கின்றனர்.

2.பிறந்த நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாமா?

மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாம். முகூர்த்தங்களுக்கு உகந்த நட்சத்திரமாய் இருப்பினும் மணமகனின் ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. அதாவது பிறந்த ஜென்ம நட்சத்திரம் அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம், அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம். கீழ்வரும் பட்டியல் மூலம் அதனை எளிதில் தெரிந்தப கொள்ளலாம்.(உதாரணமாக மணமகனின் நட்சத்திரம் மகம் எனில் மூலம், அசுவனி ஆகியவை முறையே ஜென்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களாகும்)

1.   திருமணத் தேதி குறித்தபின்ப வயதானவர்கள் யாராவது இறந்து விட்டால் திருமணம் வைக்கலாமா?

திருமணத்தைக் குறித்த முகூர்தத்திலேயே தாராளமாக செய்யலாம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் திருமணத்தைத்தவிர வேறு சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பது விதி.

2.   நாட்காட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் முகூர்த்தங்களை எல்லோரும் பயன்படுத்தலாமா?

பொதுவாக இப்பொழுது எல்லா நாட்காட்டிகளிலும் முகூர்த்த நாட்கள் குறிக்கப்படாடுள்ளன, முன்கூட்டியே திருமணமண்டபத்தை பதிவு செய்வதற்கு அம்முகூர்த்தங்களையே பலர் பின்பற்று கின்றனர், மணமக்களுக்கு சந்திராஷ்டமி நாளாக அமைகிறதா, முன்பு கூறியபடி மணமகனுக்கு கற்பு நாள் என்று கூறப்படும் ஜன்ம,ஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரமாக அமைகின்றதா என்று ஜோதிடரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மேலும் நாட்காட்டிக்கு முகூர்த்தங்களைக் குறித்துத்தருவோர், சில சிறப்பு விதிகளை அனுசரித்துக் குறிப்பதில்லை என்பது எல்லா ஜோதிடர்களும் ஏற்றுக்கொண்ட கருத்து. முகூர்த்த லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது, 8இல் குரு இருக்கக்கூடாது, குரு, சுக்கிரர் அஸ்தமன காலத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது எனப்பல விதிகள் உள்ளன அவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நாட்காட்டி முகூர்த்தங்களைப் பயன்படுத்தும் முன் ஜோதிடரை ஆலோசிப்பது நல்லது.

5.தவிர்க்க முடியாத காரணத்தால் சுபமுகூர்தம் இல்லாத நாளில் திருமணம் செய்யவேண்டிய நிலை வந்தால் அல்லது குறித்த முகூர்த்த லக்கினத்தில் தாராமுகூர்த்தம் செய்யமுடியாது போகும் பட்சத்தில் என்ன செய்வது?

அவ்வாறான நேரத்தில் வினாயகருக்கு பால் அபிஷேகம் செய்து காலதோசத்தால் தீயபலன்கள் வராமல் காத்து அருளவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், குலதெய்வத்தின் கோவிலுக்குச்சென்று பூஜிப்பதும் நல்லது மேலும் சாந்திமுகூர்த்தத்தை நல்ல நாளில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

6. எந்த கிழமை திருமணத்திற்கு உகந்தது?

வியாழக்கிழமை சிறப்பானது, புதன், திங்கள்,வெள்ளி கிழமைகள் உடன் நடைமுறையில் ஞாயிற்றுக்கிழமையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, சனி, செவ்வாய்க்கிழமைகள் விலக்கப்பட்டன.

7.. 8ஆம் தேதி, 13,28 ஆம் தேதி மற்றும் கூட்டுத்தொகை 8 வரும் நாட்களில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என சில எண்கணித நிபுணர்கள் சொல்கிறார்களே?

பொதுவாக மக்களின் நம்பிக்கையை தங்கள் வியாபாரத்திற்கு பயன் படுத்துவோர் அவ்வறு கூறவார்கள் , இன்று நாம் பயன் படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி விவிலியம் எனும் பைபிலை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்பட்ட நாட்காட்டி, அதற்கு முன் வழக்கில் இருந்த ஜுலியஸ்சீசரின் நாட்காட்டியில் கிரிகோரியன் எனும் போப்பாண்டவர் மாற்றங்கள் செய்து வெளியிட்ட நாட்காட்டியாகும் இன்நாட்காட்டிக்கும் நம் பாரம்பரியம் மிக்க சூரியசித்தாந்த பஞ்சாங்கத்திற்கும் தொடர்பு துளியும் இல்லை, ஆங்கிலத்தேதிக்கும் உச்சமாக இருக்கும் இன்றைய நட்சத்திரம் முதலியவற்றிற்கு எவ்விதசம்பந்தமும் இல்லை, வழக்கமாக மேனாட்டுப்பழக்கங்க வழக்கங்களை கைகொள்ளுதல் நாகரீகமாக பகட்டுக்கு ஏற்றுக்கொள்வது போல சிலர் நம் ஜோதிட சாஸ்திரத்தில் கலக்குகிறார்கள் இது மனதிற்கு ஊக்கம் தருவதற்காக என்றும் அவர்களே(வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்) என்றும் ஆங்கில எழுத்திற்கும் எண்கணிதம் என்ற பெயரில் எண்களைக்கொடுத்து அதை நம் நாட்டு சாஸ்திரத்துடன் கலந்து குழப்புகிறார்கள், பாலுடன் தேனைக்கலப்பதற்கும் மதுவைக்கலப்பதற்கும் வேறுபாடு அறியாதவர்களாக அவர்களைக்கொள்ள வேண்டி இருக்கிறது, நம் சாஸ்திரத்தை விட்டு விட்டு மேனாட்டு எண்கணித முறை என்று கூறினால் சீனவாஸ்து பெங்சூயி ஏற்றுக்கொள்வதைப்போல் வேண்டுமானால் ஏற்கலாம், ஆனால் உலகின் இளைய மொழிகளில் ஒன்றான ஆங்கில மொழிக்கும் நம் கிரககோச்சார உடுமகதசை போன்றவைகளுக்கும் தொடர்பு படுத்தி பாலில் மதுவைக்கலப்பதை ஏற்க முடியுமா?அப்படியே கூட்டுத்தொகையை கணக்கில் எடுக்க வேண்டும் எனில் ஆங்கிலத்தேதியை கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை, மேலும் அன்று தமிழ் தேதி என்னவென்றும் பார்க்க வேண்டாமோ? நம் சுபமுகூர்த்தங்கள், நட்சத்திரம், லக்கினம் லக்கினத்திற்கு 3,6,7,,8,11 ஆகிய இடங்கள், மணமகனின் ஜென்மஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரங்களை, கவனத்தில் கொண்டு கணிக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆங்கிலத்தேதியை வைத்து அந்த நாள் தீயபலன் கொடுக்கும் என்ற தவறான எண்ணத்தைக் கைவிடவும்


திருமணம் நட்சத்திரம்

திருமணம் நட்சத்திரம்
ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,ஹஸ்தம்,ரேவதி,அனுஷம்,மூலம்,சுவாதி,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி இந்த நட்சத்திரம் வரும் நாளில்திருமணம் செய்தால்தான் உரிய காலத்தில் குழந்தை பிறப்பு,நீண்ட நாள்நிலைக்கும் மண வாழ்க்கை,இருவருக்கும் ஆயுள் விருத்தி,ஆரோக்கியம்உண்டாகும்
திருமணம் செய்யும் நேரத்தை லக்னத்தில்.......... இருந்தால்
திருமணம் செய்யும் நேரத்தை ஜாதகமாக கணித்து அதில் லக்னத்தில்சுரியன்,சந்திரன் இருந்தால் பெண்ணுக்கு ஆயுள் குறைவு..செவ்வாய்இருந்தால் இருவருக்கும் நாசம்.சனி இருந்தால் வறுமை....ராகு,கேதுஇருந்தால் குழந்தைகளால் நிம்மதி இன்மை...

புதன் இருந்தால் புகழ்,,,,
குரு இருந்தல் ஆயுள் விருத்தி
சுக்கிரன் இருந்தால் ஆயுள் விருத்தி,வசதி
திருமணம் செய்யும் நேரத்தை லக்னத்தில்
திருமணம் நடக்கும் நேரத்தை ஜாதகமாக கணித்து எதிர்கால பலன்களைஅறியலாம்...திருமணத்திற்கு மேச லக்னம்,கடக லக்னம்,சிம்மம்,தனுசு,சிறப்பில்லை..கன்னி லக்னம்,மிதுன லக்னம்துலாம் லக்னம்,சிறப்பு...

மகரம்,கும்பம்,மீனம்,தனுசு இவை சந்தேக குணத்தாலோ அல்லதுஇருவரில் ஒருவர் யாருக்கும் சந்தேகம் வராதபடி,வேறொரு துணைதொடர்பால் வாழ்வார்கள் என காலப்பிரகாசிகை நுல் தெரிவிக்கிறது
திருமணம்
நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாகதடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்றுகேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒருபகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
.
வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும்நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள்திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடிஅருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலைஅல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமானதிருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள்முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.

No comments:

Post a Comment