Tuesday, 11 December 2012

வாஸ்து பகவான் தோன்றிய புராணக் கதை


 வாஸ்து

வாஸ்து பகவான் தோன்றிய புராணக் கதை

sree_vaasthu_bhagwan
முன்பொரு காலத்தில் அண்டகா சூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு சிவபெருமானையேப் போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனுடன் ஆக்ரோஷமாகப்போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் ஒன்று தோன்றியது.
கரிய நிறத்திலிருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களையெல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது. அண்டகாசூரன் மாண்ட பிறகு அவன் உடலையும் உண்டது. அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. எனவே தன் பசியைப்போக்கும்படி சிவனிடம் வேண்டியது. பூதம் கேட்டபடி அது விரும்பியதையெல்லாம் சாப்பிடக் கூடிய வரத்தை அளித்தார் சிவன். பூதம் பெற்ற வரத்தினால் அது மூவுலகைஇம் அழிக்கும் சக்தி பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்த தேவர்கள் ஒன்று கூடி பூதத்தை தரையில் கிடத்தி அதன் மேல் 45 கடவுளர்களை அமர்த்தினர். இதனால் பசியடங்காமல் துடித்தது.
இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றும் படி பூதம் பிரம்மாவிடம் வேண்டியது. பிரம்மா பூதத்திடம் ‘உன்னுடைய கோரபசி தணிய வீடு கட்டும்போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால் வீட்டில் வசிப்பவரை வாட்டு‘ என்று வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே வாஸ்து ஞஉஞஉஞஉஞஉயதிகளை உருவாக்கி அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையும் நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாகக் கருதப்படுகிறது.

1 comment:

  1. வாஸ்துக்கு அருமையான விளக்கம்.

    ReplyDelete