Monday, 10 December 2012

கோயில்கள் நான்கு வகையாக உள்ளன


கோயில்கள் நான்கு வகையாக உள்ளன


கோயில்கள் நான்கு வகையாக உள்ளன. 

1. ஸ்வயம் வ்யக்தம் - தானாகவே இறை சக்தி மிகுந்து இருக்கிற தலங்கள்.

2. ஆரிஷம் - ரிஷிகள் தவம் செய்து தெய்வீக சக்தியினை வரவழைத்த தலங்கள்.

3. தைவதம் - தேவர்கள் தவம் செய்து பாவம் தொலைந்து விடுதலை பெற்றதலங்கள்.

4. மானுஷம் - மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.

முதல் மூன்று வகையான கோயில்களில் தெய்வீக சக்தி தானாக தோன்றியபின்பிற்காலத்தில் அரசர்கள்நிலச்சுவான்தார்கள்பக்தர்கள் மூலமாக ஆலயங்கள்நிர்மாணம் செய்யப்பட்டுஆகம சாஸ்திர முறைப்படி பெரிய கோபுரங்கள்,கர்ப்பகிரகங்கள்மண்டபங்கள் ஆகியவை எழுப்பப் பட்டுசிற்பசாஸ்திரப்படி தகுந்தசிற்பங்கள் அங்கங்கு தேவைக்கு ஏற்ப வைக்கப் பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

நான்காவது வகையில் கோயில்கள் எழுப்பப்பட்டுவிக்ரகம் பிரதிஷ்டைசெய்யப்பட்டு ஆகமசிற்ப சாத்திரப்படி செய்யப்பட வேண்டிய கும்பாபிஷேகம்போன்றவை நிறைவேற்றப்பட்டபின் தெய்வீக சக்தி அந்த பிம்பத்தில்வந்தடைகிறது.

தர்ம சாத்திரத்தில் இறப்பிற்குப்பின் ஆன்மா நற்கதி அடைவதற்கு கோயில்எழுப்புதல் போன்ற பூர்த்த தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன

No comments:

Post a Comment