Friday, 21 December 2012

சூட்சமம்


Bhagavad-gita 2.13 The many, many frames on a reel of movie film, when seen consecutively, appear as one picture on the screen, although there are actually many different pictures. Similiarly, we see a man as localized (above), but actually his body is changing at every second. All this is happening without the notice of the viewer. However the soul within the heart (seen as a sparkling star) does not change; he remains eternally the same.
 
 
ஒரு மனிதன் இறக்கும் போது ஆன்மா உடலில் இருந்து வெளிப்படும். அதுவே மரணம் என்று அழைக்கபடுகிறது.
உடல் பழையதாகி வலிமை இழக்கும் போது அந்த உடலை விட்டு ஆன்மா வெளியேறி வேறு உடலை எடுக்கும்.
அப்படி ஆன்மா போகும் போது அந்த ஆன்மா அந்த உடலில் இருக்கும் போது கண்கள் எதையெல்லாம் கண்டதோ அந்த கண்களின் சூட்சமம் என்று அழைக்கப்படும் சக்தியை எடுத்து செல்லும். கைகள் என்ன செய்ததோ அந்த கைகளில் சக்தியை எடுத்து செல்லும்.
இதோ போல் அணைத்து புலன்களின் சூட்சமங்களை எடுத்து செல்லும்.
 
அதாவது ஒரு குப்பை லாரி ஒரு தெருவில் செல்லும். அப்போது அந்தே தெருவே நாற்ற அடிக்கும். ஆனால் அந்த குப்பை லாரி போன பிறகும் கூட நாற்றம் அந்த தெருவில் அடிக்கும்.
அதே போல உடல் இறந்து போனாலும் ஆன்மா உடன் புலன்களில் வாசனைகள் செல்லும். அது மீண்டும் வேறு உடலை எடுத்து கர்மங்களை தொடரும்.
 
அதாவது ஒரு மனிதன் நாள் முழுவதும் இறைவனை நினைத்தவாறு இருந்து , வழி பாடு செய்து அவன் பாதியில் இறந்து விட்டால் அடுத்த பிறவியில் நல்ல குடும்பத்தில் பிறந்து அவனது முந்தய பிறவியின் பாதியில் விட்ட செயலை தொடருவான்.
 
அதாவது வழிபட தொடங்குவான்.
 
இவ்வாறு படிப்படியாக முன்னேறி இறுதியில் இறைவனை அடைவான்.
 
கெட்ட வழியில் போய் இறந்தவன் மீண்டும் அடுத்த பிறவியில் கெட்ட செயலை தொடங்குவான்.
 
எடுத்துக்காட்டாக : பிறந்த குழந்தை  யாரும் சொல்லி கொடுக்காமலே பால் குடிக்க ஆரம்பிக்கிறது.
 
சிலர் சிறு வயதிலேயே பல விஷயங்களில் பயிற்சி இல்லாமலே மேதைகளாக திகழ்கிறார்கள். இந்த அறிவு அவர்களுக்கு முற்பிறவியிலிருந்து  வந்தது.
                                                              ஹரி ஓம் நமோ பாகவத்தே வாசுதேவாய

No comments:

Post a Comment