Wednesday, 19 December 2012

திருமண தடை


  திருமண தடை


லக்கினத்தில் இருந்து திருமணத்தடையை ஏற்படுத்தும் கிரகங்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். லக்கினத்தில் அமரும் கிரகங்கள் ஏழாம் வீட்டை நேரடி பார்வையாக பார்க்கும் அதனால் திருமணத்தடையை ஏற்படும்.
லக்கினத்தில் அமரும் கிரகங்கள் பொருத்து திருமணத்தடை ஏற்படும்.
சூரியன் லக்கனத்தில் அமரும் போது தந்தை அல்லது தந்தை வழி சொந்தங்கள் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.
சந்திரன் லக்கனத்தில் அமரும் போது தாயார் மற்றும் தாயாரின் வழி சொந்தங்கள் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.
செவ்வாய் லக்கனத்தில் அமரும் போது சகோதர்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.
புதன் லக்கனத்தில் அமரும் போது மாமன்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.
வியாழன் லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டிற்க்கு ஆலோசனை தருபவர் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார். 
சுக்கிரன் லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார். 
சனி லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டில் இருக்கும் வேலை ஆட்கள் மூலம் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார். 
ராகு லக்கனத்தில் அமரும் போது தாத்தா வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார். 
கேது லக்கனத்தில் அமரும் போது பாட்டி வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார். 

No comments:

Post a Comment