Wednesday, 19 December 2012

திருமணம் : குருவும் சந்திரனும்


 திருமணம் : குருவும் சந்திரனும்


வணக்கம் நண்பர்களே இப்பதிவில் குருவும் சந்திரனும் இணைந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்தால் குரு சந்திர யோகம் உண்டாகும். நல்ல பதவிகள் தேடி வரும். இந்த யோகம் இருப்பவர்கள் தீர்க்கமான சிந்தனை,எந்த வேலையிலும் நேர்வழியை கடைபிடிப்பது, சத்தியத்திற்க்கு கட்டுப்பட்டு நடப்பது போன்ற குணம் இருக்கும்.
சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்று குரு உச்சம் பெற்றால் பெரிய ராஜயோகம் இவர்களுக்கு கிடைக்கும். குரு சந்திர யோகம் மீனத்தில் இருந்தாலும் ராஜயோகம் தான். ரிஷபத்தில் இருந்தால் அந்த நபருக்கு நாட்டை ஆளும் யோகம் கிட்டும்.
குருவும் சந்திரனும் அமையபெற்ற ஜாதகர்களுக்கு எவ்வளவு ராஜயோகம் அமைந்தாலும் திருமண விசயத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.  
குருவும் சந்திரனும் ஏழில் இருந்தால் திருமண வாழ்க்கை கேள்விகுறியாக வேண்டியது தான். அதை போல் குரு ஏழில் சந்திரனின் ராசியில் சென்றாலும் பிரச்சினையை உருவாக்கும்.
குருவும் சந்திரனும் சேர்ந்த ஜாதகர்கள் தான் செய்யும் அலுவலகத்தில் உள்ள மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது அதனால் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கவில்லையே  என்ற எண்ணம் தோன்றும். தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.
குருவும் சந்திரனும் இணைந்த ஜாதகர்கள் திருமண வாழ்க்கையில் துணையை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக தெரிந்த நபரை தேர்ந்தெடுப்பது நல்லது அதைபோல் குரு ஏழில் சந்திரன் வீட்டில் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில்  இருக்கும் நபர்களும் அவரின் துணையை தேர்ந்தெடுக்கும் போது நல்லவராக பார்த்து தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வியாழக்கிழமை தோறும் தெட்சிணாமூர்த்திக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள்.ஆலங்குடிக்கு சென்று ஒரு முறை வழிபட்டு வாருங்கள்.

No comments:

Post a Comment