Monday 31 December 2012

ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .


ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ் காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங் கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசா ரம் செய்துவிட் டு, அங்கிருந்து அவரை மூர்த்தியி ல் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகு ண்டத்தில் இருக்கிறார் என்பது போல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்க ள் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால் ‘ பரம பதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகு ண்டத்துக்கு எழுந் தருளி விட்டார் என் று அர்த்தம். வைகுண்டத்தில் இருக் கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத் தமன்’ என்று சொல்வது ண்டு. ‘புருஷோ த்தமன்’ என்ற வார்த் தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத் தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்த ம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தம ன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வா மியைப் பெருமாள் என்கிறார் கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல் லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த் தையில் ‘ஸ்வம்’ என்பத ற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடை மை என்று இலக்கணமாகச் சொல் லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம் தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத் தாக உடையவர்’ என்று அர்த்தம்.

1 comment: