Monday, 31 December 2012

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்


நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய்

நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற 
து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட் கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒருமணி நேர 
ம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடி யின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப்பெற்றுச் சிர ங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழை த்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்க ளுக்குக் கருப்பைநோய் தீரும். பிரச வத்துக்கு பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகு ம் .
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையு டன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்க ளைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்து டன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன் ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட் கொண்டால் உடனே காலரா நீங்கும். 
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியை க் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுட ன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப் பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்து ம்.
10.மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக்கற்களுக் கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத்தொல் லைகளுக்கும் இது மருந்தாகிறது. 
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடு த்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறா ர்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகி றது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத் தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற் காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கல ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பள பளப்பாகி விடுமாம்.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அய்யா..! வெ. சாமி அவர்களே....! ஜான்ஸிகண்ணன், பாகல் பற்றி மேலும் கூடுதலான தகவல் அளிக்கிறேன்.

    பாகல் :

    வேறுபெயர்கள் :

    பாவல், கூலம்,கூரம், காரவல்லி.

    தெலுங்கு : Kakara
    சமஸ்கிருதம் : Karavella
    மலையாளம் : பாவல்

    இதன் குடும்பப் பெயர் :

    Cucurbitaceae.

    தாவரவியல் பெயர் :

    Momordica Charantia.

    பயன்படும் பகுதி. சமூலம்.(இலை, காய், பழம், விதை)
    சுவை : கைப்பு
    தன்மை : வெப்பம்
    பிரிவு : கார்ப்பு

    தாவர வேதிப்பொருட்கள் :

    இதன் காயில் ஒரு கசப்பு குளுக்கோசைடு , ரெசின் ஆகியவை உள்ளன.

    தீர்க்கும் நோய் :

    பித்தசமானி, புழுக்கொல்லி, உடற்றேற்றி.

    மருத்துவ குணங்கள் :

    வாத, பித்த, கபத்தின் பெருக்கைக் கட்டுப் படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுப் புழு நீங்கும்.
    பாதரசத்தின் வேகத்தை முறிக்கும். கோழை, இரைப்பு, இருமல் ஜுரம், வெள்ளை, மூலம் குஷ்டம் தீரும்.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) பாகல் இலைச் சாற்றை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூச, கை, கால் எரிச்சல் தணியும்.

    2) பாகல் இலைச் சாற்றுடன் மிளகை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட மாலைக்கண் நோய் தீரும்.
    3) பாகல் இலையை, விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டிவர 40, 50 நாட்களில் வெளிமூலம் நீங்கும்.

    4) பாகல் பழத்தைப் பிழிந்து, சாறெடுத்து, சர்க்கரை சேர்த்துப் பூச... புண்கள் ஆறும். இதையே உள்ளுக்குக் கொடுக்க கர்ப்பப்பை வலி நீங்கும்.

    5) பாகல் பழத்துடன்... ஈலையையும் சேர்த்துக் கொடுக்க.. காமாலை, குஷ்டம், மூலம் முதலியன குணமாகும்.

    6) பாகல் பழத்தை உண்டுவர... வாத நோய்கள், ஈரல் நோய்கள், இரத்தப் போக்கு, களைப்பு நீங்கும்.

    7) பாகல் இலைச்சாறு 75.மி.லி.வீதம் வாரம் ஓரிரு முறை பருகி வர சிறுநீர் சர்க்கரை நோய் மட்டுப்படும்.

    8) பாகல் ஈலைச்சாறு 25 மி.லி. வெந்நீர் கலந்து கொடுக்க..; வயிற்றுக் கிருமிகள் வெளிப்படும்.

    9) பாகல் காயை சமைத்து உண்ண...வாத, பித்த நோய்கள் நீங்கி, ஏப்பத்தை உண்டு பண்ணும்.

    10) 30 மி.லி. பாகல் இலைச் சாறை மட்டும் கொடுக்க... ஜீரணிக்கப்படாத உணவு... வாந்திமூலம் வெளியாகும். அல்லது கழிச்சலை உண்டாக்கும். வாந்தியும், கழிச்சலும் அளவுக்கு அதிகமானால்... அதை நிறுத்த சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட வேண்டும்.

    11) மிதிப்பாகல் இலை, பழம், நாவற்பட்டை ஆகியவற்றை இடித்துச் சாறெடுத்து 30 மி.லி. வீதம் 40, 120 நாட்கள் பருகிவர சர்க்கரை நோய் தீரும். அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete