Wednesday, 19 December 2012

திருமணமும் நேரமும்


 திருமணமும் நேரமும்


 எவ்வளவோ கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்திவைக்கிறார்கள் பெற்றோர்கள் ஆனால் இன்றைக்கு ஆண்கள் தனக்கு இவள் லாயக்கற்றவள் என்று தன் மனைவியின் மீது தேவையற்ற புகார்களை அள்ளி வீசிவிட்டு அவன் வேறு பக்கம் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறான். இவன் சொல்லும் காரணம் என்ன என்றால் இவள் திருமணத்திற்க்கு முன்பு ஒருவனோடு தொடர்பு இருந்தது அது இன்றும் தொடர்கிறது என்கிறான். நல்ல பெண்ணையும் ஏதாவது சொல்லி அவளை கெடுக்கிறான்.
பெண்களும் ஆண்மகனை அலி என்று சொல்லிவிட்டு அவனை விட்டு வந்துவிடுகிறாள். இருவரும் புலம்பிக்கொண்டு வேறு திசையில் பயணம் செய்கிறார்கள் இதற்கெல்லாம் காரணம் ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்காமல் திருமணத்தை நடத்தி வைப்பது தான். திருமணத்தில் இருவரின் ஜாதகத்தை நல்ல பார்த்து திருமணத்தை முடிவு செய்ய வேண்டும்.
வெறும் பொருத்தம் மட்டும் பார்க்காமல் அனைத்தையும் ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு திருமணத்தை முடிவு செய்தால் திருமண வாழ்வு நன்றாக இருக்கும். இப்பொழுது இவர்கள் கொடுக்கும் ஜாதங்கள் கூட தவறாக இருக்கிறது. முடிந்தளவு வயதை குறைத்து கொடுக்கிறார்கள். போலி ஜாதங்களாக இருக்கிறது.
சோதிடத்தில் நல்ல அறிவு இருந்தால் போலி ஜாதகத்தை எளிதில் அடையாளம் காணலாம். நீங்களும் இதனை அறிந்து கண்டுபிடித்து போலிகளை தவிருங்கள். ஜாதகத்தை பார்த்த பிறகு பொருத்தம் பாருங்கள்.
திருமணத்திற்க்கு என்று ஜாதகத்தை எடுக்கும் போது நல்ல நேரம் பார்த்து பார்க்க வேண்டும். ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக இருந்தால் நல்லது.  என்னிடம் அனுப்பும் ஜாதகங்களுக்கு இந்த நேரத்தில் பொருத்தம் பார்க்கமாட்டேன்.
அடுத்தபடியாக ராகு கேது பெண்களின் ஜாதகத்தில் மறைந்து இருந்தால் சூரிய பார்வை பட்டாலே அல்லது சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் பெண்கள் ஜாதகத்தில் புகுந்து விளையாடி விடும். அதையும் நன்றாக கவனியுங்கள். பொதுவாக இந்த ராகு, கேது, சூரியன் இணைவை யாரும் பார்ப்பதில்லை குறைந்தபட்சமாக தான் பார்க்கிறார்கள்.
ராகு சூரியன் இணைவு பெண்களின் உடம்பில் பெரும் மாற்றத்தை உண்டு செய்யும். உடம்பில் கொம்பளங்களை உண்டு செய்து உடம்பின் தோலை கெடுத்துவிடும். இந்த மாதிரி பெண்களை விலக்க வேண்டும் என்று காமசாஸ்திரத்தில் சொல்லியுள்ளார்கள்.
ராகு கேதுக்களின் நிலையை இருவரின் ஜாதகத்திலும் நன்றாக பாருங்கள் அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்களின் திருவிளையாடலை அரங்கேற்றிவிடுவார்கள்.
பையனும் பெண்னும் மூக்கும் முழியுமா லட்சணமாக இருக்காங்களா என்று பார்ப்போம் இருவரின் ஜாதகங்கள் சரியில்லை என்றால் முழி பிதுங்கிக் கொண்டிருக்க வேண்டியது பெற்றோர்களின் நிலை.
உங்களால் முடிந்தவரை நல்ல நேரமாக ஜாதகத்தை சோதிடர்களிடம் பார்ப்பது நல்லது நாள் செய்வதை நல்லோர் செய்யமாட்டார்கள்.
சோதிடர்களுக்கு நேரம் இருக்காது அதனால் இதை எல்லாம் யார் பார்ப்பார்கள் என்று அவர்களே உங்களிடம் சொல்லி ஏதாவது ஒரு கெட்ட நேரத்தில் கணிப்பார்கள் அதனால் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது.

No comments:

Post a Comment