Monday 3 December 2012

வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்?


வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்?
Temple images
தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு இதனால் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது, ரத்த ஓட்டம் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும் மூளை பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான்.
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

No comments:

Post a Comment