Friday, 21 December 2012

பிரம்ம நிலை என்றால் என்ன ?


ஆன்மா தனியாக இருக்கும் போது அதற்கு கோபம் காமம் ஆசை ஆகியவை இருப்பதில்லை. 
 
ஆன்மா உடலை எடுத்த உடன் உடல் மனத்தை பெறுகிறது. இந்த மனமே காமம் கோபம் காமம் இவற்றின் இருப்பிடம்.
 
மனத்தில் இருக்கும் காமம் ஆசை காமம் உடலை எடுத்து அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது. 
 
உடலில் இருக்கின்ற ஆன்மா இவை அனைத்தையும் சாட்சி போல் பார்த்து கொண்டு இருக்கிறது. 
 
உடல் தான் காமத்தில் ஈடு படுகிறது.
 
உடல் தான் ஆசை படுகிறது.
 
உடல் தான் கோபத்தை அனுபவிக்கிறது.
 
மனத்தில் இருக்கின்ற இவை மூன்றும் பாவ புண்ணியத்தை ஜீவனுக்கு தருகிறது.
 
மனம் இருக்கும் வரை அதில் காமம் ஆசை கோபம் போன்றவை குடி இருக்கும். 
 
மனம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் ,
 
உடலின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா வை உணர்ந்து அதில் நிலைபெற வேண்டும். அப்படி ஆத்மாவில் நிலை பெற்று விட்டால் மனமும் இருப்பது தெரியாது. உடல் இருப்பதும் தெரியாது.
 
உலகம் அனைத்தும் ஒன்று என்ற எண்ணம் தோன்றும் .அதாவது பிரம்மம் என்று ஒன்று உள்ளது அதை உணரலாம் .
 
பிரம்ம நிலையை அடைந்து விட்டால் இறைவனை உணரலாம்.
 
பிரம்ம நிலை என்றால் என்ன ?
 
ஒரு ஆண் உயிர் அணு பெண்ணின் கரு உடன் இணைந்து அது ஒரு உயிர் உள்ள கருவை உருவாக்குகிறது.
 
அது பார்பதற்கு ஒரு சதை பிண்டம் போல் தான் இருக்கும். ஆனால் அந்த சதை பிண்டதிர்க்கு உயிர் இருக்கிறது.
 
உயிரும் கொஞ்சம் சதையும் இருக்கிறது. அது என்ன நிலையில் இருக்கும். அந்த நிலை தான் பிரம்ம நிலை. அதாவது ஒரு துக்கமும் இல்லை சுகமும் இல்லை அது அமைதியாக பிரபஞ்சத்துடன் இணைந்து பிரபஞ்சமாக எந்த கவலையும் இல்லாமல் கருவில் இருக்கிறது. அது இந்த உலகத்தை கண்டதில்லை. அது காணும் உலகம் ஒன்றும் இல்லாத அமைதியான உலகம்.
 
கருவில் இருக்கும் சிறு உயிர் பிண்டத்தின் நிலை பிரம்ம நிலைக்கு ஒப்பிடபடுகிறது.
             ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய 

No comments:

Post a Comment