Wednesday, 19 December 2012

எந்த திசையில் இருந்து துணைவர் வருவார்


 எந்த திசையில் இருந்து துணைவர் வருவார்

 திருமண தசாவில் இப்பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். உங்களுக்கு வரும் துணைவர் எந்த திசையில் இருந்து வருவார் என்பதை பார்க்கலாம். பொதுவாக ஏழாம் வீட்டு அதிபதியின் நிலையை வைத்து சொல்லுவார்கள். ஏழாம் வீட்டு தசா சில பேருக்கு நடக்காது ஆனால் கண்டிப்பாக ஏழாம் வீடு சம்பந்தப்பட்டு வேறு தசா நடந்தாலும் இப்பலனை பொதுவாக தரும் என்பது விதி.
உங்களின் வாழ்க்கை துணைவர் இருக்கும் திசையை அறிந்துக்கொள்வது ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி தானே தெரிந்துகொள்ளுங்கள்.
ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் கிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.
ஏழாம் அதிபதி சந்திரனாக இருந்தால் வடமேற்கு பகுதியில் உங்கள் வாழ்க்கை  துணைவர் வருவார்.
ஏழாம் அதிபதி செவ்வாயாக இருந்தால் தெற்குபகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.
ஏழாம் அதிபதி புதனாக இருந்தால் வடக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார். 
ஏழாம் அதிபதி குருவாக இருந்தால் வடகிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.
ஏழாம் அதிபதி சுக்கிரனாக இருந்தால் தென் கிழக்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.
ஏழாம் அதிபதி சனியாக இருந்தால் மேற்கு பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கை துணைவர் வருவார்.
இந்த திசையில் இருந்து உங்களுக்கு அதிகபட்சம் வரவாய்ப்பு இருக்கிறது அப்படி இல்லை என்றால் உங்கள் காதலன் அல்லது காதலியாவது அந்த திசையில் இருந்து வந்து இருப்பார்.

No comments:

Post a Comment