Monday, 3 December 2012

கண்திருஷ்டி உண்மையா?


கண்திருஷ்டி உண்மையா?
Temple images
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள் நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை. அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.
குழந்தைகள் தவறு செய்து விட்டு விழித்தால், முழிக்கிற முழியைப் பாரு என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இவன் முழியே சரியில்லே என்று காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர். பிறந்த குழந்தையை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றவே கருஞ்சாந்துப் பொட்டு வைப்பர். கட்டடங்கள் எழுப்பும்போது பூதம் போன்ற பொம்மை வைப்பதும் திருஷ்டியிலிருந்து தப்புவதற்குத் தான். கிராமப்புறங்களில் திருஷ்டி கழிக்க உப்பையும், மிளகாயையும் சேர்த்து தலையைச் சுற்றி நெருப்பில் போடுவது வழக்கம். வியாபார நிறுவனங்களில் செவ்வாய், வெள்ளி தேங்காய் உடைப்பதும் திருஷ்டிக்காகவே. உக்ர தெய்வங்களான காளி, நரசிம்மர், துர்க்கை போன்ற தெய்வ வழிபாடு செய்யும் இடங்களில் மட்டும் திருஷ்டிதோஷம் இருப்பதில்லை. தற்போது கண்திருஷ்டி கணபதி வழிபாடு பெருகியுள்ளது.

No comments:

Post a Comment