Thursday, 20 December 2012

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்


நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்கு இஞ்சினியர்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான காரணங்களும்…

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்.

முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்.
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்.
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்.

திரையில் படங்கள் அலை அலையாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இணைப்பை சரிபார்க்கவும்.
2.வைரஸ் புகுந்துள்ளதா என பார்க்கவும்.
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்).

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை.
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம்(RAM) சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். 

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

No comments:

Post a Comment