Thursday 6 December 2012

சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு.


சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்பு பாதிக்கப்படுவதை டயாபடிக் நியுரோபதி என்கிறோம். இதனால் தண்டுவடத்திலிருந்து வெளிவரும் எந்த நரம்புகளில் வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம். பல நரம்புகள் பாதிக்கப்படும்போது (POLY NEUROPATHY) இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும் வலி மட்டுமல்லாது மரத்துப்போதல், உணர்ச்சி மாறுதல் ஏற்படும்.
இது இரவில் அதிக வலி ஏற்படுத்தும். ஒரு நரம்பு பாதிக்கப்படும் போது (MONONEURO PATHY) தற்காலிகமாக மணிகட்டை உயர்த்த முடியாமல் போதல், கால் பாதத்தை உயர்த்த முடியாமல் போதல், ஏதாவது ஒரு பக்கம் கண் அசைவில்லாமல் போதல் போன்ற அறிகுறி ஏற்படும். நரம்பு வேருடன் பாதிக்கப்படுகிறது இதனால் (RADICULOPATHY) ஒரு தண்டுவட நரம்பு பகிர்ந்தளிக்கும் இடத்தில் மட்டும் வலி ஏற்படும்.
எடுத்துக்காட்டாக வயிற்றுப்பகுதியில் சில இடங்களில் மட்டும் தொடையில் மட்டும் கென்டைகாலில் மட்டும் அல்லது நெஞ்சுப்பகுதியில் மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் தீராத வலி ஏற்படும். தாணியங்கி நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்போது (AUTONOMIC NEUROPATHY)உணவு செரிமான பகுதிகளையும் வயிறுமற்றும் குடல் பகுதியையும் அதிகம் பாதிக்கிறது. இதனால் உணவு விழுங்குதல் மற்றும் செரிமானம் பாதிக்கும். வயிற்றுப்போக்கு அல்லது மலம்கழிக்க சிரமம் ஏற்படும்.
ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைத் தனமை பாதிக்கப்படும். இத்தகைய நோயை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதினால் தவிர்கலாம் அப்படியும் வந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். சிறப்பு வலிநிவாரண மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளன.

No comments:

Post a Comment