Thursday, 6 December 2012

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!


FILE
நம்மில் பலர் வேலைக்கு மனு செய்யும்போது அனுப்பும் CV அல்லது பயோடேட்டா என்கிற சுவிவரத்தில் நிறைய சுயபிரஸ்தா/சுய தம்பட்ட வார்த்தைகளைப் போட்டு நம்மை ஏதோ ஒரு வித்தியாசமான ஜீவியாக காண்பிக்க முயல்கிறோம், ஆனால் அனைவரும் இதே தேய்ந்து மங்கிய வார்த்தைகளை பயோடேட்டாவில் பயன்படுத்துவது வேலை கொடுப்போரிடம் எதிமறை தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லின்க்டு இன் என்ற இணையதளத்தில் காணப்படும் ப்ரொஃபைல்களில் "கிரியேட்டிவ்" (Creative) "மோட்டிவேட்டட்" (Motivated) எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்" (Extensive Experience) போன்ற சுயபிரஸ்தாப மந்திரச் சொற்கள் அதிகம் காணப்படுவது குறித்து தொழில்துறை வேலைவாய்ப்பு நிபுணர் டேவிட் ஷ்வாஸ் கூறுகையில், இதுபோன்ற வார்த்தைகள் ஒருவிதத்திலும் வேலைகொடுக்கும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்கிறார்.

மேலும் இது போன்ற வார்த்தைகள் வேலைகொடுப்போரிடம் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.

நாம் நம் 'ரெஸ்யூம்'-இல் போடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிரூபணம் இருந்தால் போடலாம் இல்லாவிட்டால் அது வெறும் வேஸ்ட் என்கிறார் அவர். அதுபோன்ற நிரூபணம் இல்லையா அது தொடர்பான வார்த்தைகளும் சுய முன்னுரிமைகளும் சிவியில் இருக்கக் கூடாது.

இதுபோன்ற ஒரு 10 வார்த்தைகள் அதாவது சிவியில் பயன்படுத்தக்கூடாத 10 வார்த்தைகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளார் அவையாவன:

கிரியேட்டிவ் (Creative)

எபெக்டிவ் (Effective)

மோட்டிவேட்டட் (Motivated)

எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ் (Extensive Experience)

டிராக் ரெகார்ட் (Track Record)

இன்னொவேட்டிவ் (Innovative)

ரெஸ்பான்சிபிள் (Responsible)

அனலிடிகல் (Analytical)

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (Communication Skills)

பாசிடிவ் (Positive)

மேலும் ரெஸ்யூமில் நான் இன்னவாக ஆகவுள்ளேன், எனது லட்சியம்,எனது நோக்கம், எதிர்காலத் திட்டம் என்றெல்லாம் ஆங்கிலத்திலகுறிப்பிடுவோம் ஆனால் இவையெல்லாம் நீங்கள் இப்போது பார்த்துககொண்டிருக்கும் வேலையைச் செய்ய நீங்கள் தகுதியற்றவர்கள் என்ற ஒரபிம்பத்தையே ஏற்படுத்தும் என்று அந்த நிபுணர் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவின் முன்னணி வேலைவாய்ப்பு கன்சல்டண்ட் நிறுவனமாபோர்டு போர்ட்ஃபோலியோவில் முதன்மை ஆலோசகராக இருப்பவர்தான் இந்ஷ்வார்ஸ்.

No comments:

Post a Comment