Sunday, 27 January 2013

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது. 2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது 3) கோவில்களில் தூங்கக்கூடாது 4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது 5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில் படுத்து தூங்கக்கூடாது.ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.ஒரு காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.கணவன் மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.குருவிற்கும் சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.இரு கைகளாலும் தலையை சொறியக்கூடாது. தலையில் வழித்து எண்ணையை உடம்பில் தடவக்கூடாது.

No comments:

Post a Comment