Wednesday, 9 January 2013

விரதங்களும் அவற்றின் பலன்களும்


விரதங்களும் அவற்றின் பலன்களும்





                        நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும்கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்துதீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால்பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோமவார விரதம்:
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணைதிருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன்மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்:
நாள் : தேய்பிறைவளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான்நந்திதேவர்
விரதமுறை : சித்திரைவைகாசிஐப்பசிகார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடிசிவாலயம் சென்று வணங்கிபிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன்வறுமைநோய்அகால மரணம்பயம்அவமானம் ஏற்படுதல்மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலைபாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல்தூங்குதல்குளித்தல்எண்ணெய் தேய்த்தல்விஷ்ணு தரிசனம் செய்தல்பயணம் புறப்படுதல்மந்திர ஜபம் செய்தல்படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்:
நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்:
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்திகுடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்:
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினிசூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம்சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின்மாம்பழச்சாறுபால்பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு

மங்களவார விரதம்:
நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர்வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்புபயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்:
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதிபரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்:
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம்இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்:
நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்:
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாதுகாலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்:
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்:
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்:
நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்:
நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்:
நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்:
நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும்பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவுகடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்:
நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும்பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணைபுத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்:
நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவுஇரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்:
நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கிஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம்இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்:
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் நாள் பழம்இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
பலன்  : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்

1 comment:

  1. சோமவார விரதத்திற்கு ஒரு விளக்கம் கேட்டிருந்தேன். அருமை. நான் இதுவரையிலும், வாரம், வாரம் திங்கட்கிழமை, ஒரு செயல் சக்ஸஸ் ஆக விரதம் இருப்பேன். அது சக்ஸஸ் ஆகிவிடும். இரவு தான் சாப்பிடுவேன். ஆனால், தாங்கள் கூறியதுபோல், கார்த்திகை மாதம் தான் விரதம் இருக்க வேண்டும் என்றிருந்ததில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒவ்வொரு விரதம் என்பது தெரியாது. விளக்கம் அருமை.

    ReplyDelete