Thursday 31 January 2013

காதல், கலப்பு,ஆத்மாத்தமான,வெற்றிகரமான திருமணத்திற்கான இணைவுகள்


காதல் திருமணத்திற்கான இணைவுகள்

1 ) 7 -ம் அதிபதி . 7 -ம் வீட்டுடனான 5 ம் அதிபதியின் நெருங்கிய தொடர்பு - இணைவோ , பார்வையோ , பரிவர்த்தனையோ இருப்பின் காதல் திருமணம் உண்டு ...
2 ) குரு அதிகமாக பாதிப்படைந்து , 7 - ம் அதிபதி லக்னாதிபதியை விட பலம் பெற்றும் மற்றும் சனி , செவ்வாய் அல்லது இராகு 9 - ம் வீட்டில் இருக்க ...
3 ) லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ , 7 ம் அதிபதியோடு இணைந்து கேந்திர மேற ....
4 ) சந்திரனும் , சுக்கிரனும் இணைந்து 7 ல் இருக்க ...
5 ) 7 ல் சுக்கிரன் இருந்து , செவ்வாயால் பார்க்கப்பட ....
6 ) செவ்வாய் , சுக்கிரன் , இராகு இணைந்து 7 ல் இருக்க ....
7 ) 7 ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரனை , சனி அல்லது செவ்வாய் பார்க்க ....

கலப்பு திருமணத்திற்கான இணைவுகள்

1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 - ல் இருக்க ...
2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ....
3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..
4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க
5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற ...
6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ....
7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ....
8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க ...
9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட ...

ஆத்மாத்தமான தம்பதிகளாக வாழ்வதற்கான இணைவுகள்

1 ) மேஷம் அல்லது விருச்சிகத்தில் , சுக்கிரனோடு ஏழாம் அதிபதி இணைந்திருக்க ...
2 ) அதே இரண்டு இராசிகளில் சுக்கிரனோடு பத்தாம் அதிபதி இணைந்திருக்க ...
3 ) 7 ல் குரு இருக்க ....
4 ) உச்ச சுக்கிரன் 7 ல் இருக்க ....
5 ) 7 ல் குரு , சந்திரன் இணைந்திருக்க ..
6 ) சுக்கிரன் 7 ஆம் அதிபதியாகி , குருவோடு இணைய அல்லது குருவால் பாக்கப்பட ...
7 ) 7 -ஆம் வீடு சிம்மமாகி நற்கோளால் பார்க்கப்பட ...
8 ) சுக்கிரன் 7 ம் அதிபதியாகி நற்கோள் இணைவு அல்லது பார்வை பெற ....
9 ) கேந்திரத்தில் 7 ம் அதிபரோடு நற்கோள் இணைவுற ...
10 ) 7 ம் வீடு குருவால் பார்க்கப்பட ....

வெற்றிகரமான தம்பதிகளுக்கான , இராசி மற்றும் இலக்கனநிலைகள்

1 ) ஒருவரின் 7 -ஆம் அதிபதி , மற்றவரின் லக்னத்திலோ அல்லது இராசியிலோ இருக்கவும். ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் இராசியிலோ அல்லது நவாம்ச ராசியிலோ இருக்க ...
2 ) ஒருவரின் நவாம்ச இராசி மற்றவரின் இலக்கினமாக அமைய ...
3 ) ஒருவரின் ஏழாமிடம் மற்றவரின் இலக்கினமாக அமைய ....
4 ) சுக்கிரன் மற்றும் 7 ம் அதிபதியின் பலத்தை ஒப்பு நோக்குகையில் , இவற்றில் பலம்மிக்க ஒன்று மற்றவரின் லக்னத்திலோ அல்லது இராசியிலோ இடம் பெற ....
5 ) இராசியிலிருந்தோ அல்லது நவாம்ச இராசியிலிருந்தோ , 7 மிடத்தில் மற்றவரின் 9 ம் அதிபதி அல்லது லக்னாதிபதியோ இடம் பெற ...
6 ) சந்திர அஷ்டவர்க்கத்தில் அல்லது சர்வாஷ்டவர்க்கத்தில் எந்த இராசியில் மற்றவரின் லக்னமாகவோ அல்லது இராசியாகவோ அமைய ....
7 ) ஆண் ஜாதகத்தின் லக்னாதிபதி பாகையும் சுக்கிரனின் பாகையும் கூட்டி வரும் பாகையில் பெண்ணின் இராசி அமைய ...
8 ) அதேபோல் , லக்னாதிபதி பாகையும் , 7 -ம் அதிபதி பாகையும் கூட்ட வரும் பாகையில் பெண்ணின் இராசி அமைய ...
9 ) லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி நீச இராசியிலோ அல்லது உச்ச இராசியிலோ அமைய ...
10 ) துவாதசாம்ச கட்டத்தில் சந்திரனின் நிலை மற்றவரின் இராசியாக இருக்க , மேலும் ஆணின் 7 ம் அதிபதியோடு , பெண்ணின் 7 ம் அதிபதி , சம்பந்தம் பெற இருவருக்கும் இடையே வெற்றிகரமான மணவாழ்க்கை அமைகிறது .

எந்த திசையிலிருந்து வாழ்க்கை துணை வரும்

1 ) சுக்கிரனிலிருந்து 7 ம் வீட்டு அதிபதி இருக்கும் இராசியின் திசை
2 ) லக்னத்திலிருந்து 7 ம் அதிபதியின் திசை ...
3 ) 7 ம் வீட்டை பார்வை செய்யும் கிரகங்களின் திசை

திருமண விஷயங்களில் நவாம்சத்தின் தாக்கம்

1 ) தீய கிரக வீட்டில் நவாம்ச லக்னம் அமைவது வரவேற்கதக்கதல்ல .
2 ) நவாம்சத்தில் , லக்னத்தில் சனி , செவ்வாய் அல்லது சூரியன் இடம் பெறுவது மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு வழி வகுக்காது .
3 ) நவாம்ச லக்னாதிபதியுடன் சனி , செவ்வாய் , சூரியனின் இணைவு மோசமானது .
4 ) நவாம்ச லக்னத்தை சனியும் , செவ்வாயும் பார்த்தாலோ அல்லது இருந்தாலோ அல்லது 7 ம் அதிபதியோடு இணைந்தாலோ , திருமண வாழ்க்கை பாதிப்படையும் .
5 ) நவாம்ச லக்னாதிபதியோடு இணைந்த செவ்வாய் விவாகரத்துக்கு வழிவகுக்கிறார் .
மனைவிக்கு மரணம் நேரும் நேரம்
கணவனின் ஜாதகத்தில் , 7 ம் அதிபதி சுக்கிரன் மற்றும் அவர்களுக்கு இடங்கொடுத்த கிரகங்கள் ஆகியவை பலம்மிக்கதாக இருக்க மனையாளுக்கு பூர்ண ஆயுள் உண்டு .
சுமாரான பலம் - மத்திய ஆயுள்
பலங்குறைந்தால் - அற்ப ஆயுள் எனலாம்

No comments:

Post a Comment