Wednesday, 9 January 2013

முயற்சியில்தான் வளர்ச்சி முளைக்கிறது. பயிற்சியில் தான் வாழ்க்கை செழிக்கிறது.


முயன்று கொண்டே இருங்கள்...
முயற்சி என்பது உயிரோட்டம்;
முயன்றால் வாழ்க்கை பூந்தோட்டம்;
காயங்கள் படலாம், கலங்காதே;
உளிபட்டால், கல்லும் சிலைதானே......


மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும் உறங்கவதும் மட்டுமல்ல வாழ்க்கை, உழைத்துக் கொண்டும் உயர்ந்து கொண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயன்று கொண்டே இருங்கள். 


சோதனைகள் ஏதும் இல்லாமல் கிடைக்கும் வெற்றியில் ருசியிருக்காது. பிரச்சனைகளும், சோதனைகளும் தன் நமக்குள் உள்ள சக்தியை வெளிக்கொண்டு வருகின்றன. 


சாதாரண நிலையில் பிறந்து, தனது வாழ்க்கையை தொடங்கி, பெரிய சாதனைகள் செய்து, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ஏராளம்.  அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்தான், கீழே வருவன:

  1. மற்றவர்களால் முடியாது என நினைக்கும் காரியத்தை முடித்துக் காட்ட வேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.
  2. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்திக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
  3. தான் சார்ந்துள்ள துறை சார்ந்த தகவல்களை அவற்றை ஒவ்வொரு முயற்சியிலும் பயன்படுத்த வேண்டும்.
  4. சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்ற மனப்பான்மையை விடுத்து சாதனைக்காக வேலை செய்கிறேன் என்ற லட்சிய வேட்கையோடு பணியாற்றும் பண்பு வேண்டும். 
  5. நியாயமான வழியில்தான் முன்னேற  வேண்டும் என்ற ஒழுக்க நெறியும், அப்படிப்பட்ட ஒழுக்க நெறிகொண்டு வெல்லும்போது தான் மன மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது என்ற கொள்கைப் பிடிப்பு வேண்டும். 
  6. எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் தான் கொண்டிருக்கும் தன சார்ந்த மதிப்பீடுகளை விட்டுவிடாத மனவுறுதி வேண்டும். 
  7. தனது உழைப்பை முழுமையாக நம்புவதோடு, சுற்றியிருப்போரின் நன்மதிப்பை பெரும் விதத்திலான அணுகுமுறையைக் கையாள வேண்டும்

இத்தகைய பண்புகளை உடையவராக நீங்கள் மாறினால், முன்னேற்ற ஏணியில் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கலாம். 
முயலுங்கள் முன்னேறுங்கள்.

No comments:

Post a Comment